பீஸ்ட் பட தோல்விக்கு இதுதான் காரணம் தலைவரே.. ரஜினிக்கு போன் போட்ட விஜய்

நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தலைவர் 169 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் இந்தப் படம் உருவாவதற்கு முழுக்க முழுக்க அனிருத் தான் காரணம் என்று கூறப்பட்டது.

ரஜினியின் நெருங்கிய உறவினரான அனிருத் தான் நெல்சன் பற்றி ரஜினியிடம் கூறி அவர் ஒரு அற்புதமான கதையை வைத்திருக்கிறார் நீங்கள் ஒரு முறை கேட்டுப் பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகுதான் ரஜினியும் நெல்சனிடம் கதையை கேட்டு இருக்கிறார்.

அந்த கதை அவருக்கு பிடித்து போகவே இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் ஒப்புக்கொண்டுள்ளார். படங்களை இயக்க ஆரம்பித்து சில காலத்திலேயே நெல்சன் ரஜினியை இயக்குவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் பீஸ்ட் திரைப்படத்தால் தற்போது இந்த வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நெல்சன் விஜய்யை வைத்து இயக்கி இருந்த பீஸ்ட் திரைப்படம் தற்போது பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் படத்தை பார்த்த ரஜினியும் நெல்சன் இயக்கத்தில் நடிப்பதா வேண்டாமா என்ற ஒரு குழப்பத்தில் இருக்கிறார். இதனால் நெல்சன் இந்த திரைப்படத்தை இயக்க வாய்ப்பில்லை என்ற ஒரு தகவலும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதைப் பார்த்த விஜய் நேரடியாக ரஜினிக்கு போன் செய்து நெல்சன் பற்றி பேசி இருக்கிறார். அவர் ஒரு அற்புதமான இயக்குனர் ஏதோ ஒரு சில தவறுகள் இந்த படத்தில் செய்துவிட்டார். ஆனால் கண்டிப்பாக உங்களுக்கு அது போன்ற எந்த தவறும் நடக்காது. அதுபோக பீஸ்ட் படத்தில் ஒரு சில இடத்தில கதைகளை நான் மாற்ற சொல்லி இருந்தேன், அதுதான் இவ்வளவு நெகட்டிவ் விமர்சனங்களை சேர்த்துள்ளது.

நீங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று நெல்சனுக்கு ஆதரவாக அவர் பேசியிருக்கிறார். அதன்பிறகு ரஜினியும் குழப்பம் நீங்கி இந்த படத்தில் நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார். தற்போது விஜய் செய்த இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அவருடைய நல்ல மனசைப் பற்றி புகழ்ந்து பேசி வருகின்றனர்.

மேலும் மிகவும் அமைதியாக இருக்கும் விஜய் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அனைவருடனும் மிகவும் கலகலப்புடன் பழகி வந்தார். அதிலும் சமீபத்தில் வெளியான அவர்களின் பேட்டியிலும் விஜய் நெல்சனை மனமாரப் பாராட்டி இருந்தார். தற்போது இந்த சம்பவமும் அதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறது.