பீஸ்ட் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா.? பல சீக்ரெட்டை கூறிய நெல்சன்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அடுத்தடுத்து வெற்றியடைவதுடன் வசூலிலும் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம் கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். பிரபல பத்திரிக்கைக்கு சமீபத்தில் பேட்டியளித்த நெல்சன், நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஒரு ரா ஏஜெண்டாக விஜய் நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் விஜய்யின் பெயர் “வீர ராகவன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். பான் இந்தியா ரிலீசாக உள்ள இந்த திரைப்படத்தில் விஜய்யின் பெயர் அறிவிப்பு தற்போது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தனது முந்தைய படங்களான “கோலமாவு கோகிலா” மற்றும் “டாக்டர்” போல் “பீஸ்ட்” இருக்காது என்றும் நெல்சன் கூறினார், படம் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்ததாக இருக்கும் என்று உறுதியளித்தார்.

“பீஸ்ட்” படம் 3 பாடல்களைக் கொண்டிருக்கும். “அரேபிக் குத்து” மற்றும் “ஜாலி ஓ ஜிம்கானா” ஆகிய 2 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், 3வது பாடல் கதையின் ஒரு பகுதியாகும். இதற்கிடையில், “பீஸ்ட்” படத்தில் விஜய்யின் கேரக்டர் பெயர் ஃப்ரெஷ்ஷாகவும், நிறைவாகவும் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

பீஸ்ட்’ ட்ரெய்லர் நாளை (ஏப்ரல் 2) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் டிரெய்லர் வெளியீட்டை பிரம்மாண்டமான திட்டங்களுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர். மேலும் டிரைலரின் பல சிறப்பு காட்சிகள் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்திற்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, நிர்மல் எடிட்டிங்கை கவனிக்கிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘என்றும், படம் ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.