பீஸ்ட் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் செய்தி வாசிப்பாளர்.. இணையத்தில் கசிந்த தகவல்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை திரையரங்கில் காண்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் பீஸ்ட் படத்தில் அரபி மொழி மற்றும் தமிழ் மொழி இணைந்து ஒரு பாடல் உருவாகி உள்ளதாக தகவல் வெளியானது. அதன்பிறகு படத்தைப் பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வெளியில் வந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர். ஆனால் இப்போதும் படக் குழுவிலிருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மிகவும் பிரபலமானவர் சுஜாதா பாபு. தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விஜய்க்கு அம்மாவாக சுஜாதா பாபு நடித்து வருவதாக கூறி வருகின்றனர். தற்போது படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை பற்றிய தகவல் வெளியாகி உள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் படத்தினைப் பற்றிய அப்டேட் மற்றும் தீபாவளி அன்று படத்தினைப் பற்றிய ஏதாவது ஒரு தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தீபாவளியன்று விஜயின் படங்களுக்கு மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். அதனால் பீஸ்ட் படத்தை பற்றிய தகவலை படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பீஸ்ட் படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என அனல் அரசு தெரிவித்துள்ளார். அதேபோல் படத்தின் பாடல் காட்சிகளில் விஜய்யின் நடனமும் பெரிதளவு பேசப்படும் என கூறிவருகின்றனர். தற்போது பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் கூடிய விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.