டாக்டர் படத்தின் வெற்றி மூலம் உலகளவில் பிரபலமான இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் தான் தற்போது நடிகர் விஜய் நடித்து வருகிறார். டாக்டர் படம் மாபெரும் வெற்றி பெற்றதால் பீஸ்ட் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மீண்டும் ஜார்ஜியா செல்ல உள்ளனர். திட்டமிட்டபடி ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பி மீதமுள்ற காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி காஷ்மீரில் தற்போது ஷூட்டிங் நடத்த முடியாத காரணத்தால் ஜார்ஜியாவில் காஷ்மீர் போல செட் அமைத்து ராணுவம் தொடர்பான காட்சிகளை படமாக்க உள்ளார்களாம். இது தவிர படத்தில் விஜய் ராணுவ அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காஷ்மீர் தீவிரவாதிகளுடன் மோதும் விஜய் படம் முழுவதும் சாதாரண நபராக வலம் வந்து இறுதியில் இராணுவ வீரனாக வந்து படத்தின் சஸ்பென்சை உடைப்பது போல் கதை உருவாகி உள்ளதாம். கிட்டத்தட்ட விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை போல் தான் பீஸ்ட் படம் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

சென்னையில் மால் ஒன்றை செட் போட்டு சில தினங்களுக்கு முன்பு சூட்டிங் நடைபெற்று தளபதியின் புகைப்படம்  வைரலானது.  அப்பொழுது அந்த மாலில் கடத்தப்பட்ட மக்களை காப்பாற்றுவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

என்னதான் கதை லீக் ஆனாலும் தளபதியின் ரசிகர்கள் ஸ்க்ரீனில் விஜய்யை பார்ப்பதற்கு வெறிகொண்டு காத்திருக்கின்றனர். இருப்பினும் ஜார்ஜியா படப்பிடிப்பு நிறைவடைந்ததும் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளை ஒரே கட்டமாக முடித்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.