பீஸ்ட் படத்தின் முக்கிய வில்லன்.. ரொம்ப கொடூரமான ஆளாச்சே

சமீபகாலமாக இணையதளத்தில் அதிக ட்ரெண்ட் ஆவது இளையதளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் அப்டேட் பற்றி தான். பீஸ்ட் படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

பீஸ்ட் படத்தில் தற்போது இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பாடல்கள் இரண்டும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படம் துப்பாக்கி படத்தை போல் தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்கபடுகிறது.

மேலும் இப்படத்தில் இரண்டிற்கு மேற்பட்ட வில்லன் கதாபாத்திரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஒரு வில்லன் இயக்குனர் செல்வராகவன் என்றும், இப்படம் தீவிரவாதியின் கதை என்பதால் அதற்கு ஏற்றார்போல் ஒரு வில்லனை தேடுகிறார் என்றும் சொல்லப்பட்டது.

இவர் ஏற்கெனவே தனுஷின், மாறன் படத்திலும், ஸ்லம்டாக் மில்லினர் படத்திலும் நடித்துள்ளாராம் . இப்பொழுது படத்தில் மூன்று வில்லன்களில் ஒருவர் செல்வராகவன் என்பது தெரிந்தது. ஆனால் மற்ற இரண்டு வில்லன்களுள் தற்போது அடுத்த வில்லன் அங்கூர் விகால் பப்பன் என்பதும் தெரிந்துவிட்டது.

மற்றுமொரு வில்லன் யார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் அனல் பறக்கும் கார் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக ரஷ்யாவிலும் சில சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.  அதிக சண்டைக் காட்சிகள் இருப்பதால் ரசிகர்களிடையே இப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.