பீஸ்ட் படத்தின் பாடலை கேட்டதாக சொன்ன சித்ரா லட்சுமணன்.. வராத பாட்ட எப்படி சார் கேட்டீங்க

தமிழ் சினிமாவில் சூரசம்காரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சித்ரா லட்சுமணன். அதன் பிறகு பெரிய தம்பி மற்றும் சின்ன ராஜா போன்ற படங்களை இயக்கினார். மண்வாசனை, அம்பிகை நேரில் வந்தாள் மற்றும் சின்னப்பதாஸ் போன்ற படங்களை தயாரிப்பாளராக தயாரித்தும் உள்ளார்.

தற்போது ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவரது நடிப்பில் டிக்கிலோனா படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் தற்போது அரண்மனை 3வது பாகத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

தற்போது சித்ரா லட்சுமணன் டூரிங் டாக்கீஸ் எனும் சேனலில் லென்ஸ் என்ற நிகழ்ச்சியில் ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம கேட்கும் கேள்விக்கு இவர்தான் பதில் சொல்கிறார் என நினைத்து வந்தனர். ஆனால் இப்பதான் தெரிகிறது யார் யாரோ சொல்லிக் கொடுப்பதை தான் இவர் கூறிவருகிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

உதாரணத்திற்கு ரசிகர் ஒருவர் அண்ணாத்த படத்தின் பாடல் பிடிக்குமா உங்களுக்கு எந்த அளவிற்கு அண்ணாத்த படத்தின் பாடல் பிடிக்கும் என கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு சித்ரா லட்சுமணன் அண்ணாத்த படத்தின் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதுவும் வலிமை மற்றும் பீஸ்ட் படத்தின் பாடல்களை விட எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா வலிமை படத்தின் பாடலை விட அண்ணாத்த படத்தின் பாடல் பிடிக்கும் என்று சொன்னது கூட சரி ஆனால் பீஸ்ட் படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை அப்படி இருக்கும்போது சித்ராலட்சுமணன் மட்டும் எப்படி பீஸ்ட் படத்தின் பாடலை கேட்டிருப்பார் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

இதனை வைத்து பார்க்கும்போது சித்ரா லட்சுமணன் யாரோ சொல்வதைக் கேட்டு அப்படியே வீடியோவில் சொல்லி வருகிறார் என்பது தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.