பீஸ்ட், கே ஜி எஃப் படத்திற்கும் உள்ள 5 ஒற்றுமைகள்.. அடப்பாவிகளா! நெல்சனுக்கு இது தெரியுமா பாருங்க

விஜய்யின் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. அதே சமயத்தில் அடுத்த நாளே கன்னட நடிகர் யாஷின் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கே ஜி எஃப் 2 திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த 2 படங்களின் ட்ரெய்லர்களும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கேஜிஎஃப் 2 மற்றும் பீஸ்ட் படத்தின் ட்ரைலரில் உள்ள 5 ஒற்றுமைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த மார்ச் 27ஆம் தேதி நடிகர் யாஷின் கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதேபோல பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலரில் உள்ள ஒற்றுமைகளை ரசிகர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இந்த இரண்டு திரைப்படங்களிலும் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளது. முக்கியமாக துப்பாக்கி சுடும் காட்சிகள்,ரத்தம் தெறிக்கும் காட்சிகள், ஜெட் பறக்கும் காட்சிகள் உள்ளிட்டவற்றை இடம்பெற்றுள்ளது.

கே ஜி எஃப் 2 மற்றும் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர்களின் கால அளவு சரியாக 2 நிமிடங்கள் 56 நொடிகளாக உள்ளது . அதேபோல தளபதி விஜய் மற்றும் ராக்கிங் ஸ்டார் யாஷ் உள்ளிட்ட பெயர் டைட்டில்கள் ஒரு நிமிடம் 20 ஆவது நொடியில் வரும். மேலும் இந்த 2 படங்களிலும் முதல் முறையில் பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் 2 போன்ற டைட்டில் பெயரை இரண்டு நிமிடங்கள் முப்பத்தி மூன்று நொடிகளில் ட்ரெய்லரில் காட்டப்படுகிறது. அதேபோல முடியும் போது காட்டப்படும் படங்களின் பெயர்களில் 2 நிமிடங்கள் 50 நொடிகளில் காட்சியளித்தது.

அதுமட்டுமின்றி முக்கியமாக தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் போஸ்டரும், ராக்கிங் ஸ்டார் யாஷின் கேஜிஎப் 2 திரைப்படத்தின் போஸ்டரும் கருப்பு வெள்ளை கலர்களில் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் ஜெட்டிலிருந்து புல்லட் வீசப்படும் காட்சிகளும் இவ்விரண்டு திரைப்படங்களில் ஒரே நேரத்தில் இடம் பெற்றுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் 73 மில்லியன் வியூஸ் பெற்று அதிக அளவில் பார்க்கப்பட்ட டீஸராக சௌத் இந்திய சினிமாவில் இருந்தது. ஆனால் கே.ஜி.எஃப் 2 படத்தின் டீசர் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் டீசரை விட அதிகமான 252 மில்லியன் வீவ்ஸ்களை பெற்று சாதனை படைத்தது.

நானும் நடிகர் விஜய்யின் ஃபேன் என்று குறிப்பிட்ட நடிகர் யாஷ் கே ஜி எஃப் 2 மற்றும் பீஸ்ட் திரைப்படம் இரண்டுமே வெற்றி பெற வேண்டுமென ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். அதேபோல பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தானும் கேஜிஎப் 2 திரைப்படத்தை பார்க்க ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே இவ்விரண்டு படங்களின் டிக்கெட்டு முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் எடுத்து வருகின்றனர்.