பீடா கடை போட்டு முன்னேறிய கிழக்குச் சீமையிலே பட பிரபலம்.. கோடிக்கணக்கில் பணத்தை இழந்த பரிதாபம்

கிழக்குச் சீமையிலே படத்தின் மூலம் அறிமுகமான இந்த பிரபலம். அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ளார், ஆனால் ஆரம்பத்தில் சினிமாத்துறையில் தனக்கென ஒரு முத்திரை பதிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். நடிப்பின் மீதுள்ள ஆசையால் தான் சென்னைக்கு வந்துள்ளார்.

அதன்பிறகு ஏவிஎம் ஸ்டுடியோ அருகே ஒரு பீடா கடை போட்டுள்ளார் நடிகர் விக்னேஷ். அங்க வரும் பிரபலங்களின் பழக்கத்தினால் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன்பிறகு ஒரு நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

அப்பவும் ஒரு நிலையான நடிகராக ஆக முடியாததற்கு காரணம் அவர் உடன் இருந்த சில நபர்கள் தான். இந்நிலையில் விக்னேஷின் கடையில் வாடகை தரகராக இருந்த ராம் பிரபுவிடம் நட்பாக பழகி உள்ளார். ராம் பிரபு விக்னேஷ்யிடம் நம்பத்தகுந்த வார்த்தைகளைச் சொல்லி அவரை ஏமாற்றி உள்ளார்.

ஆனால் அவர் இரிடியம் என்ற பொருள் என்னிடம் கிடைத்ததாகவும் அந்த பொருள் மத்திய அரசு உதவியுடன் ஆஸ்திரேலியா உள்ள கம்பெனிக்கு விற்பதாகவும் விக்னேஷ் ஏமாற்றி 1.81 கோடி ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். விக்னேஷை மட்டுமல்லாமல் பல பேரை ராம்பிரபு ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் விக்னேஷ் இதைப்பற்றி முழுமையாக சொல்லாமல் ஏதோ மலுப்பி வருகிறார். அதுமட்டுமல்லாமல் நான் தப்பு செய்துவிட்டேன் என்று அவரே கூறுகிறார். தற்போது விக்னேஷ், ராம்பிரபு பிரபு மீது வழக்கு கொடுத்துள்ளார். போலீசார் விசாரித்தால் மட்டுமே உண்மை என்ன என்பது வெளிவரும்.

இந்நிலையில் பணத்தை இழந்த விக்னேஷ் அதிலிருந்து எப்படியாவது மீண்டு வருவதற்காக சினிமாவில் மீண்டும் நடிக்க விரும்புவதாகவும் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என சினிமாத்துறையில் தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். சினிமாவில் நடித்தாவது கடனை அடைக்க வேண்டும் என விக்னேஷ் நினைக்கிறார் போல.