பிழைப்பில் மண்ணை போட்ட தில்ராஜ்.. விஜய் படத்தை காப்பாற்றுவாரா?

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தில் ராஜு. இவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் கீழ் அவர் பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார்.

அந்த வரிசையில் இவர் தற்போது நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். இவர் தயாரிப்பு மட்டுமின்றி படங்களை வினியோகிக்கும் வேலையையும் செய்து வருகிறார். அப்படி சமீபத்தில் இவர் பீம்லா நாயக் என்ற தெலுங்கு படத்தை விநியோகம் செய்து இருந்தார்.

பவன் கல்யாண், ராணா டகுபதி, நித்யா மேனன், சம்யுக்தா மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திரைப்படம் தற்போது தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் ஒரு புதுமையான புரட்சியை ஏற்படுத்தினார்.

அதாவது இந்த படத்தின் டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால் மக்கள் தியேட்டருக்கு சென்று தான் புக் பண்ண வேண்டும் என்று அவர் அறிவித்திருந்தார். புக் மை ஷோ, டிக்கெட் நியூ போன்ற எந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கும் டிக்கெட் புக்கிங் வழங்கப்படமாட்டாது என்று அவர் அறிவித்திருந்தார்.

ஏனென்றால் அந்த நிறுவனங்கள் ஒரு டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால் அதற்கு கூடுதலாக 30 ரூபாய் வாங்குகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு 15 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. ஆனால் அவர்களின் இந்த முறையால் பொதுமக்கள் அதிக அளவில் கஷ்டப்படுகின்றனர்.

எனவேதான் தில் ராஜூ இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு அசத்தி இருந்தார். இதற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது. அப்புறம் அந்த நிறுவனத்தினர் அவருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி 30 ரூபாயிலிருந்து அதை 18 ரூபாய் ஆகக் குறைத்தனர்.

இதுதான் தற்போது தெலுங்கு திரையுலகில் பரபரப்பு செய்தியாக இருக்கிறது. இந்நிலையில் தில் ராஜு விஜய்யை வைத்து தயாரிக்கும் இந்த படத்திற்கும் இதே முறையை கையில் எடுப்பாரா என்று தளபதியின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.