பிரேம்ஜியை கட்டிக்கப்போற பொண்ணு இவங்களா? ரொம்ப நெருக்கமாக அவரே வெளியிட்ட புகைப்படம்

இதுவரையில் முரட்டு சிங்கள் என சொல்லிக் கொண்டிருந்த பிரேம்ஜி வாழ்க்கையில் திடீரென காதல் புயல் ஒன்று வீசிய வருவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்த நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாக தற்போது செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரேம்ஜிக்கு பெரிய இசை அமைப்பாளராக வேண்டும் என்பது கனவு ஆசை லட்சியம் என்று சொல்லலாம். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே பல படங்களில் இசையமைப்பாளராக பின்னணி இசைக் கோர்ப்பில் பணியாற்றியுள்ளார். அதே போல் யுவன் சங்கர் ராஜாவின் பல பாடல்களில் இவரது வாய்ஸ் மட்டும் தனியாக தெரியும்.

பிறகு பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட்பிரபு தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக வலம் வரத் தொடங்கிய போது அவருடைய படங்களில் காமெடி நடிகராகவும் நடித்து வந்தார். பிரேம்ஜிக்கு வயது நாற்பதுக்கு மேல் ஆன நிலையிலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார். கேட்டதற்கு நண்பர்களுடன் அப்படியே ஜாலியாக இருந்து பொழுதை கழித்து விடவேண்டும் என்று கூறி வந்தார்.

இந்நிலையில் திடீரென சமூக வலைதளங்களில் பிரேம்ஜியை உடன் ஒரு பெண்மணி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரல் ஆனது. அந்தப் பெண்மணிக்கும் பிரேம்ஜிக்கும் காதல் எனவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தியும் வெளியானது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவியது.

ஆனால் இது குறித்து விசாரிக்கையில் பிரேம்ஜி அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்மணியை தான் திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் அது வதந்தி எனவும் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆரம்பத்தில் இந்த மாதிரி விஷயங்கள் வெளியாகும்போது இல்லை என்று சொல்வதும் பிறகு அவர்களே அதை உறுதிப்படுத்தும் சினிமாவில் சகஜம்தானே. பொறுத்திருந்து பார்ப்போம் முரட்டு சிங்கிள் எப்போது மிங்கில் ஆக போகிறார் என்று.