பிரேமம் பட இயக்குனருடன் மெகா கூட்டணி போடும் அஜ்மல்.. அவரே வெளியிட்ட வைரல் பதிவு.!

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவை விட அதிக பாராட்டையும் பெயரையும் பெற்றுள்ளார் நடிகர் அஜ்மல். தற்போது தான் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மைல்கல் படமாக அமைந்த அஞ்சாதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அஜ்மல். மிஷ்கின் இயக்கிய அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் மிக வலுவாக இருந்ததால் பாராட்டுகள் கிடைத்தது.

அதன் பிறகு ஜீவா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய கோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்தார். அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய உயரம் கிடைக்கும் என பல பத்திரிகைகளில் செய்திகளாக வெளியிட்டன.

ஆனால் அதன் பிறகு  சில வருடங்கள் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த அஜ்மலுக்கு, நெற்றிக்கண் படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி மீண்டும் செகண்ட் இன்னிங்சை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

இன்னிலையில் சூப்பர் ஹிட் படமான பிரேமம் படத்தின் இயக்குனரான அல்போன்ஸ் புத்திரன் படத்தில் அஜ்மல் நடிக்கப்போவதாக தனது இன்ஸ்டால் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த படமானது திரில்லர் கலந்த காதல் படமாக உருவாக்கப்பட உள்ளதாம். இந்தப்படத்தில் பிரிதிவிராஜ் கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதம் கார்த்திக்கை கேவலப்படுத்திய சிம்பு படக்குழு.. நம்ப வைத்து மோசம் செய்த அட்டூழியம்

ஒரு சமயத்தில் சினிமாவில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் சிம்பு திரைத்துறையை விட்டு விலகும் நிலைமை இருந்தது. அப்போதுதான் மாநாடு திரைப்படம் வெளியாகி அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இதன் மூலம் அவர் தன்னுடைய ...