பிரம்மாண்ட ஷாப்பிங் மால், ரத்தக் கறையுடன் தளபதி விஜய்.. லீக்கான பீஸ்ட் பட சூட்டிங் ஸ்பார்ட் வீடியோ

நடிகர் விஜய்யின் 65வது படமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிட்டத்தட்ட இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் பீஸ்ட் படம் குறித்து அப்டேட் கேட்டபோது கூட படத்தின் இயக்குனர் நெல்சன் சஸ்பென்ஸ் என கூறி அப்டேட் கூற மறுத்திருந்தார்.

இந்நிலையில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. படப்பிடிப்பு நடைபெறும் பகுதியில் படக்குழுவினர் உட்பட பார்வையாளர்கள் என யாரும் புகைப்படம் எடுக்கவோ வீடியோ எடுக்கவோ அனுமதி கிடையாது. அப்படி இருந்தும் யாரோ வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சண்டைக்காட்சி ஒன்றிற்காக மால் ஒன்றில் நடந்த காட்சியை சுமார் 40 வினாடி வீடியோவாக யாரோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதுதவிர ரத்தக்கறை படிந்த சட்டையுடன் விஜய் நிற்கும் புகைப்படமும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியானதை கண்டு அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இவ்வாறு படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாவது ஒன்றும் புதிதல்ல.

முன்னதாக பல படங்களின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இதுபோன்ற செயல்களை தடுக்க இயலவில்லை என்பதுதான் உண்மை. தற்போது விஜய் போன்ற ஒரு பெரிய நடிகருக்கே இந்த நிலையா என கோலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.