பிரம்மாண்ட இயக்குனரால் பட வாய்ப்பை இழந்த வாரிசு நடிகர்..

அந்த நடிகர் அக்கட தேசத்தை சேர்ந்த வாரிசு நடிகராக இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே இருந்தார். காரணம் இவர் அறிமுகமான முதல் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. அப்படத்திற்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அவர் பிரபலமானார்.

தற்போது பிரபல இயக்குனர் ஒருவரின் பிரம்மாண்ட படத்தில் நடித்து வரும் அந்த வாரிசு நடிகர், முதன் முறையாக கோலிவுட்டில் பிரபல இயக்குனர் ஒருவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த இயக்குனர் கோலிவுட்டில் முதன்மை இயக்குனர் என்பதால், கோலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வரலாம் என அந்த வாரிசு நடிகர் மகிழ்ச்சியில் இருந்தார்.

ஆனால் தற்போது அந்த இயக்குனருடன் கூட்டணி வைத்ததை நினைத்து அந்த வாரிசு நடிகர் புலம்பி வருகிறாராம். காரணம் தனது படத்தில் நடித்த பிறகு படப்பிடிப்பு முடியும் வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என வாரிசு நடிகருக்கு அந்த இயக்குனர் கண்டிஷன் போட்டுள்ளாராம்.

இயக்குனரின் இந்த திடீர் கண்டிஷனால், தான் புதிதாக நடிக்க இருந்த அக்கட தேச படத்தை சற்று தள்ளி வைத்துள்ளார் வாரிசு நடிகர். நடிகரின் இந்த திடீர் அறிவிப்பால் அதிருப்தி அடைந்த தயாரிப்பாளர் அவருக்கு பதில் வேறு நடிகரை நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளாராம். இதனால் வாரிசு நடிகர் பட வாய்ப்பை தவறவிட்ட சோகத்தில் உள்ளாராம்.

மேலும் கோலிவுட் இயக்குனரின் படத்தை நம்பி சொந்த மொழியில் வந்த பட வாய்ப்பை தவறவிட்டோமே. இந்த படம் வெற்றி பெற்றால் மட்டுமே தனது மார்க்கெட்டை நிலை நிறுத்த முடியும் எனவும் வாரிசு நடிகர் பயங்கர குழப்பத்திலும், சோகத்திலும் உள்ளாராம்.

நேருக்கு நேராக கலாய்த்த வனிதா.. பொறுமை இழந்து கோபப்பட்ட விஜய்

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு நம்பிராஜன் இயக்கத்தில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் வனிதா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தளபதி விஜயின் ஜோடியாக ...