பிரபுதேவாவிடம் கோரிக்கை வைத்த விஜய்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து விஜய் அவரது 66வது படத்தில் நடிக்க உள்ளதும், இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளதும் நாம் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த செய்தி தான்.

பீஸ்ட் படம் முடிவடைந்த பின்னர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெறும் இரண்டு பாடல்களுக்கு பிரபல நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா நடனம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை தமிழில் மட்டுமே நடித்து வந்த விஜய் தற்போது முதன் முறையாக இப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் கால்பதிக்க உள்ளார். விஜய் சிறப்பாக நடனம் ஆடுபவர் தான். இருப்பினும் தெலுங்கு ரசிகர்கள் சற்று வித்தியாசமாக எதிர்பார்ப்பார்கள் என்பதால், இப்படத்திற்கு பிரபுதேவாவை நடனம் அமைக்குமாறு விஜய் கேட்டு கொண்டாராம்.

மேலும், ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து பிரபு தேவா இயக்கிய ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். பிரபு தேவாவின் வற்புறுத்தல் காரணமாகவே விஜய் அந்த படத்தில் நடனமாடினாராம். எனவே தற்போது தெலுங்கில் தான் அறிமுகம் முதல் படம் அட்டகாசமாக இருக்க வேண்டும் என்பதால் பிரபு தேவாவை நடனம் அமைக்க விஜய் கேட்டு கொண்டுள்ளாராம்.

இதுதவிர என்ட்ரி மாஸாக இருக்குமாறு தெறிக்க விடும் வகையில் வித்தியாசமான நடன அசைவுகளுடன் கம்போஸ் செய்யுங்கள் என பிரபு தேவாவிடம் நடிகர் விஜய் பிரத்யேகமாக கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே போக்கிரி படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. தற்போது வரை அந்த டான்ஸ் பிரபலமாக உள்ளது. எனவே மீண்டும் இணைய உள்ள இந்த கூட்டணி நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.