தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகளை வைத்து எடுப்பதில் கைதேர்ந்தவர் பிரபுசாலமன். இவரது இயக்கத்தில் வெளியான கும்கி, தொடரி ஆகிய படங்கள் அனைத்துமே கிராமத்தின் கதையை மையமாகக் கொண்டு அமையும். அதிலும் கும்கி படம் பிரபு சாலமனுக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

பிரபுசாலமன் பொருத்தவரை அவரது படத்தில் அனைத்து காட்சிகளுமே அடர்ந்த காடுகளில் தான் எடுப்பார். இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் தற்போது பிரபுசாலமன் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ஒரு அரசியல்வாதியின் கதாபாத்திரத்திற்கு பிரபல பேச்சாளரும் அரசியல் பிரமுகருமான நாஞ்சில் சம்பத்தை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாஞ்சில் சம்பத் அரசியலில் ஆரம்பகாலத்தில் மதிமுக கட்சியில் இணைந்து தனது பணியை தொடர்ந்தார். அரசியல் என்றாலே அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சி தாண்டுவது நாஞ்சில்சம்பத் மட்டும் விதிவிலக்கல்ல. இவரும் ஆரம்பத்தில் மக்களுக்கு சேவை செய்வதாக பல மேடைகளில் பேச்சுகள் கூறிவிட்டு அடுத்தடுத்த கட்சிகளில் தாவுவதில் வல்லவராகத் தான் இருந்துள்ளார்.

அதன் பிறகு அதிமுக கட்சியில் 2012ஆம் ஆண்டு இணைந்தார். ஜெயலலிதா நாஞ்சில் சம்பத்துக்கு கார் கொடுத்து அழகு பார்த்தார். அதன்பிறகு அதிமுக கட்சி தொடர்ந்து பணியாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் தனது வித்தையை காட்டினார் நாஞ்சில் சம்பத். அதாவது 2019 ஆம் ஆண்டு திமுக கட்சிக்கு பிரச்சாரம் மேற்கொண்டார். இப்படி அனைத்து கட்சிகளும் பணியாற்றியுள்ள நாஞ்சில் சம்பத் தற்போது படத்திலும் ஒரு அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு அரசியல் கதாபாத்திரத்தில் நாஞ்சில்சம்பத் நடிக்கவுள்ளார். இப்படத்திலும் இவர்கள் எந்தெந்த கட்சிகளில் தாவி தனது அரசியல் பயணத்தில் காண்பிக்கிறார் அல்லது ஒரே கட்சியில் இருந்து மக்களுக்காக போராடும் அரசியல்வாதியாக நடிக்கிறார் என்பது பற்றி தகவல் தற்போது வெளியாகி இல்லை ஆனால் இவர் அரசியல்வாதியாக நடிப்பதாக மட்டும் தகவல் வெளியாகியுள்ளது.