பிரபாஸின் ராதேஷ்யாம் டீசர்.. 400 கோடி செலவு என்றால் சும்மாவா!

உலக சினிமாவே அறியும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படங்களின் வெற்றி அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் இனி அவரே நினைத்தாலும் அவரது வளர்ச்சியை தடுக்க முடியாது என்கிற அளவுக்கு அவரது சினிமா மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டது.

படத்திற்கு படம் பிரம்மாண்டம் காட்டுவதில் பிரபாஸ் பட இயக்குனர்கள் அதிகம் கவனம் எடுத்து வருகின்றனர். அந்தவகையில் அடுத்ததாக சுமார் 400 கோடி பட்ஜெட்டில் ராதேஷ்யாம் என்ற படம் உருவாகியுள்ளது. காதல் கதைக்கு எதற்கு இவ்வளவு பட்ஜெட் என ஒருபக்கம் கேள்வி எழும்ப சமீபத்தில் வந்த டீசரை பார்க்கும்போது கண்டிப்பாக இது காதல் படம் மட்டும் அல்ல என்பது தெரியவருகிறது.

ரதேஷ்யம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாக வேண்டிய இந்த படம் குரானா பிரச்சினை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இன்று பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு ராதேஷ்யாம் படக்குழுவினர் டீசரை வெளியிட்டு உள்ளனர். பார்ப்பதற்கு சாஹோ பட ஸ்டைலில் இருந்தாலும் படத்தில் 400 கோடி செலவு செய்து பிரமாண்டமாக செய்து இருப்பது நன்றாகவே தெரிகிறது. மேலும் பிரபாஸின் தோற்றமும் இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது.

டீசரை பார்க்கையில் கண்டிப்பாக ராதேஷ்யாம் படம் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ராதே ஷ்யாம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.

சாமி பட வில்லன் பெருமாள் பிச்சை ஞாபகம் இருக்கா.? நிஜத்தில் தெரியாத சுவாரஸ்யங்கள்

திரையுலகில் ஹீரோக்களுக்கு கிடைப்பதை போல் வில்லன்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஆனால் ஒரு சில வில்லன் கதாபாத்திரங்கள் தங்கள் நடிப்பு மூலம் அந்த வரலாற்றை மாற்றி எழுதி வருகிறார்கள். அதில் மிகவும் முக்கியமான வில்லன் நடிகர் ...
AllEscort