பிரபல பெண் தொழிலதிபருக்கு ஸ்கெட்ச் போட்ட பிக்பாஸ்.. சர்ச்சைகளைக் கிளப்பும் சீசன்5!

வருகின்ற அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களின் பட்டியலை பிக்பாஸ் குழு தொடர்ந்து சஸ்பென்சாக வைத்துள்ளன.

இந்த சூழலில்  தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சமந்தா, சினேகா, மீனா இவர்களுடைய தோழியுமான பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரான ரேணுகா பிரவீன் என்பவர் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளார்.

பிரிட்டனில் சில ஆண்டுகள் பணிபுரிந்த பின், தென்னிந்தியாவிலேயே முதல் முதலாக ஐ லேஷ் (Lash) ஸ்டுடியோவை அமைத்து, அழகுக் கலை நிபுணராக ரேணுகா பிரவீன் பிரபலமானார். அதுமட்டுமின்றி இவரின் ரெகுலர் கஸ்டமராக பிரபல நடிகைகள் இடம்பெற்றுள்ளனர்.

சமந்தா, மீனா, சினேகா போன்ற நட்சத்திரங்கள் இவருக்கு நெருக்கமான தோழியாக இருக்கின்றனர். அத்துடன் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகைகளும் இவரின் ஸ்டூடியோவுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

எனவே பிக்பாஸ் சீசன் 5 இல் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் தொழிலதிபர்களையும் போட்டியாளர்களாக களமிறக்க பிக்பாஸ் டீம் திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த முறை வித்தியாசமாக போட்டியாளர்களை தேர்வு செய்யும் முடிவில் விஜய் டிவி உறுதியாக உள்ளதாம்.

இவ்வாறு போட்டியாளர்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துவதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.