பிரபல நடிகர் தவறவிட்ட காத்துவாக்குல 2 காதல் பட வாய்ப்பு.. கடைசி நேரத்தில் நடந்த டிவிஸ்ட்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் பிரபு, கலா மாஸ்டர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட இருக்கிறது. கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

நயன்தாரா மற்றும் சமந்தா இருவரையும் காதலிக்கும் கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து அசத்தியிருக்கிறார். ஏற்கனவே நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் நானும் ரௌடிதான், இமைக்காநொடிகள் போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இந்த ஜோடி மூன்றாவது முறையும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் இந்த படத்தை பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்த திரைப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி கேரக்டரில் நடிக்க இருந்த நடிகர் சிவகார்த்திகேயன் தான்.

இவர் நயன்தாராவுடன் இணைந்து வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதன் காரணமாக இந்த திரைப்படத்தில் விக்னேஷ் சிவனின் முதல் சாய்ஸாக இருந்தது சிவகார்த்திகேயன் தான். ஆனால் கடைசி நேரத்தில் இந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு சென்றுள்ளது.

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாதது தான் இதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியின் கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால்தான் இந்த வெற்றி ஜோடி இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.

அதேபோல் சமந்தா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகை திரிஷா. ஆனால் அவருக்கும் நயன்தாராவுக்கும் இடையே திரையுலகில் ஒரு மறைமுகப் பனிப்போர் நடந்து வருகிறது. அதனால் விக்னேஷ் சிவனின் இந்த முயற்சி கைகூடாமல் போகவே சமந்தா அந்த கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பின் இருக்கும் இந்த செய்தி தற்போது ரசிகர்களுக்கு புதிய தகவலாக இருக்கிறது.