பிரபல நடிகரால் தள்ளிப்போகும் விருமன் படம்.. காசெல்லாம் கரையிதே என அழாத குறையாக சூர்யா

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விருமன். இப்படத்தை கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தின் மூலம் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தை சூர்யா 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் கார்த்தி மற்றும் முத்தையா கூட்டணியில் உருவான கொம்பன் திரைப்படம் கார்த்திக்கு பெரிய அளவில் வெற்றியை பெற்றுக் கொடுத்ததால் இப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறும் என கூறி வருகின்றனர்.

படக்குழுவினர் தற்போது தேனி மாவட்டத்திற்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் ஆனால் படக்குழுவினர் சென்னை திரும்பிய தகவல் வெளியானது. அதற்கு காரணம் இப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஆனால் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் தற்போது கால்ஷீட் கொடுக்க முடியாமல் உள்ளனர்.

ஆனால் படக்குழுவினர் பிரகாஷ்ராஜ் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்பதற்காக பிரகாஷ் ராஜ் வந்ததும் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என திட்டமிட்டு தற்போது படக்குழுவினர் சென்னை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தீபாவளி நெருங்குவதால் கண்டிப்பாக ஒரு 15 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடியாது என கூறியிருந்தனர். தற்போது பிரகாஷ்ராஜும் படப்பிடிப்பு தள்ளிப் போனதால் சூர்யா மற்றும் கார்த்தி குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரகாஷ்ராஜை தூக்கிட்டு வேறொரு நடிகரை போட்டாலும் சூர்யா, கார்த்தி மற்றும் பிரகாஷ்ராஜ் மூவருக்கும் இருக்கும் நட்புக்குள் விரிசல் ஏற்படும் என்பதால் சூர்யா தயாரிப்புச் செலவு அதிகமானாலும் பரவாயில்லை விடுங்கள் என கூறி வருவதாக தெரிவித்துள்ளனர்.

பீஸ்ட், வலிமையுடன் மோதும் பிரம்மாண்ட படம்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வலிமை படம் ஒருவழியாக முடிவிற்கு வந்துள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை ...