பிரபல கட்சித் தலைவரை நேரில் சந்தித்த சந்தானம்.. அரசியலில் ஆசை வந்திருச்சோ!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் காமெடியில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் சந்தானம். காமெடியில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது எனும் அளவிற்கு தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டிருந்தார். சந்தானம் டைமிங், ரைமிங் ஆகியவற்றுடன் கூடிய காமெடிகளை செய்து பலரது மனதை வென்றதோடு, தனது படங்களிலும் அதே டெக்னிக்கை ஃபாலோ செய்கிறார்.

ஆனால் எப்போது இவருக்கு ஹீரோவாகும் ஆசை வந்ததோ அப்போதிலிருந்து இவரது மார்க்கெட் சரிய தொடங்கியது என்று தான் கூற வேண்டும். சந்தானத்தை காமெடி நடிகராக ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் ஏனோ தெரியவில்லை அவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இவரது நடிப்பில் வெளிவந்த ஒரு சில படங்களும் சுமாரான வெற்றியையே பெற்றன.

தற்போது சந்தானம் மூன்று கெட்டப்புகளில் நடித்து வெளியாகியுள்ள டிக்கிலோனா படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது.முன்பெல்லாம் திரையரங்கில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படங்களுக்குத்தான் சக்சஸ் மீட், பார்ட்டி என்று கொண்டாடி வந்தார்கள்.

ஆனால் தற்போது ஓடிடியில் வெளியாகி நான்கு நாட்கள் கூட ஆகாத சந்தானத்தின் டிக்கிலோனா படத்திற்கு சக்சஸ் மீட் கொண்டாடியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சந்தானம், பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தானம் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர் ராமதாஸ் அவர்களின் பேத்தி சங்கமித்ராவின் திருமணத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐயாவை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சந்தானம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் சந்தானத்திற்கு அரசியலில் ஆர்வம் வந்திருச்சா என்று கிசுகிசுக்கின்றனர்.