முன்பெல்லாம் நடிகை விஜயசாந்தி மட்டுமே ஹீரோக்களுக்கு இணையாக நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும், ஆக்சன் காட்சிகளிலும் நடித்து வந்தார். அவருக்கு அடுத்தபடியாக என்றால் நடிகை நயன்தாராவை கூறலாம். ஹீரோவுக்கு இணையாக அல்லது நாயகியை மையப்படுத்தி உருவாகும் படங்களில் மட்டுமே நயன்தாரா நடித்து வருகிறார்.

இதன் காரணமாகவே இவர் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாகவே நயன்தாராவை பார்த்து அனைத்து நடிகைகளுக்கும் அந்த ஆசை வந்து விட்டது போல. பல நடிகைகளும் சோலோ நாயகி கதைகளை தேர்வு செய்து வருகிறார்கள். முன்னதாக திரிஷா, சமந்தா, தமன்னா போன்ற நடிகைகள் நடித்து வந்த நிலையில், தற்போது நடிகை அமலாபாலும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமான நடிகை அமலாபால் இறுதியாக வெளியான ஆடை படம் வரை சற்று வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக அமலாபால் நடித்தது சர்ச்சைக்குள்ளானாலும் படம் நல்ல வரவேற்பையே பெற்றது.

தற்போது ஆடை படத்தை தொடர்ந்து அமலாபால் சோலோ நாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று அமலாபாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியானது. அனூப் எஸ் பானிக்கர் இயக்கும் இந்த படத்தை அமாலா பாலின் தயாரிப்பு நிறுவனமே தயாரித்து வெளியிடுகிறது.

காடவர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இப்படத்தில் அமலா பால் ஒரு பாரன்ஸிக் சர்ஜனாக நடித்துள்ளாராம். இதற்காக ஒரு மருத்துவமனையில் ஒரு வாரம் அமலாபால் பயிற்சி எடுத்து படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பர்ஸ்ட் லுக் என்றால் சாதாரணமாக அல்ல பிணங்களுக்கு நடுவே அமர்ந்து அமலாபால் உணவு உண்பது போல வெளியாகி உள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்ப்பதற்கே மிரட்டலாக உள்ளது. நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்ஷ்ய குமார் வெளியிட்ட மிரட்டும் டீசர்