பிக் பாஸ் 5வது சீசனில் உறுதியான 6 பிரபல போட்டியாளர்கள்.. அனல் பறக்கும் லேட்டஸ்ட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதன் விளைவாக இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து, 5வது சீசன் வரும் அக்டோபர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, அடுத்த வருடம் ஜனவரி மாதம் நிறைவடையவுள்ளது.

எனவே பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும். மேலும் இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் கசிகிறது. எனவே இந்த சீசனில் பங்கேற்கும் 6 போட்டியாளர்களை பற்றிய விபரம் தற்போது கிடைத்துள்ளது.

சந்தோஷ் பிரதாப்: இவர் தமிழ் சினிமாவில் 12 படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம்தான் இவர் பெரிதும் பிரபலம் அடைந்துள்ளார்.

பிரதைனி சர்வா: இவர் சென்னையில் பிறந்து தமிழ் பேசக்கூடிய ஒரு அழகிய மாடல். மேலும் படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தில் நடித்துள்ளார். சினிமாவில் அதிக பட வாய்ப்புகள் கிடைப்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். ஆகையால் இவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகு எவ்வளவு படவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கோபிநாத் ரவி: இவரும் தமிழ் பேசக்கூடிய மாடல். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் பஹீரா படத்திலும் நடித்துள்ளார்.

மிலா: மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகை எக்கச்சக்க ரசிகர்களைக் கொண்ட நடிகையான சகிலா அவர்களின் வளர்ப்பு மகள் தான் மிலா.  இவர் 100% பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. ஒரு திருநங்கை பிக்பாஸில் பங்கேற்பது இதுவே முதல் முறை. தற்போது மிலா சன் டிவியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

பவானி ரெட்டி: ரெட்டைவால் குருவி, சின்னதம்பி போன்ற சீரியல்களின் மூலம் பிரபலமான பவானி ரெட்டி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் ஒருசில கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக ‘இனி அவனே’ என்ற படத்தில் ஆபாச காட்சியில் நடித்த பவானி ரெட்டியின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

சூசன்: மைனா, ராட்சசன் போன்ற படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை சூசன்.