பிக் பாஸ் வீட்டு பாத்ரூமில் குடுமிப்பிடி சண்டை.. வேடிக்கை பார்த்த போட்டியாளர்கள்

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது அனுதினமும் மக்களுக்கு சுவாரசியம் குறையாமல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கேப்டன் பதவிக்கு போட்டியிட தகுதியானவர்களை தேர்வு செய்யும் போட்டி நடத்தப்பட்டது.

போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து கரவை மாடு ஒன்றின் மடியிலிருந்து பாட்டில்களை வைத்து பாலை நிரப்ப வேண்டும். இறுதியாக யாருடைய கையில் அதிக பால் இருக்கிறதோ அந்தக் குழுவினர் தலைவர் போட்டிக்கு போட்டியிட தகுதியானவர்கள் என்று பிக்பாஸ் அறிவித்தார்.

இதனால் போட்டியாளர்களும் முண்டியடித்துக்கொண்டு பாட்டில்களில் பால்களை நிரப்ப ஆரம்பித்தனர். அப்போது இவர்கள் செய்த அட்டூழியத்தினால் கரவை மாடு உருவத்தில் வைக்கப்பட்ட பொம்மையை நார் நாராக பிச்சு எறிந்து விட்டனர்.

மேலும் பாட்டிலில் பிடித்து பாலில் தண்ணீரை கலக்க தாமரை சைகை காட்டினார் என பவானி குற்றம்சாட்டியதற்கு கடும் கோபமடைந்த தாமரை, பாவனியை கைநீட்ட ஓங்கினார். அதன்பிறகு சக போட்டியாளர்கள் தாமரையும் பாவனியையும் சமாதனம் செய்து விலக்கி விட்டனர்.

இதுமட்டுமின்றி சிபி மற்றும் அக்ஷராவிற்கு இடையே டபிள்யூ டபிள்யூ போட்டியே நடந்தது அந்த அளவிற்கு இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர். அத்துடன் சிபி தன்னுடைய கோபத்தை அங்கிருக்கும் பொருட்களை தூக்கி எறிந்து வெளிப்படுத்தினார்.

இவ்வாறு தலைவர் போட்டிக்காக நடைபெற்ற போட்டியின்போது போட்டியாளர்கள் அனைவரும் விறுவிறுப்பு குறையாமல் தங்களுக்குள்ளே போட்டி போட்டுக் கொண்டதால் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

மன அழுத்தத்தால் அவதிப்படும் பிரபல நடிகை.. இன்னும் ஒரு வருடத்தில் திருமணமாம்.!

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தில் அறிமுகமானார் தமன்னா. இதற்கு முன்னதாக தெலுங்கு,ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். கேடி படத்தில் அறிமுகமானாலும் கல்லூரி படத்தில் ஹீரோயினாக நடித்தார். கல்லூரி படத்திற்கு பிறகு தமன்னாவுக்கு  தமிழில் பட வாய்ப்புகள் ...