பிக் பாஸ் பிரபலத்துடன் உரிமையாக ஆதங்கப்பட்ட சிவகார்த்திகேயன்.. தாமரை கூறிய பதில்

விஜய் டிவி தொகுப்பாளராக இருந்து அதன்பிறகு தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்பதால் அவ்வபோது ஒரு சில நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன 5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலேவிலும் கலந்து கொண்டார். எனவே பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் நாடகக் கலைஞராக அறிமுகமான தாமரைச்செல்வி, 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர்.

இவர் கடைசி சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் கொடுத்த 12 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்திருக்கலாம் என்று ரசிகர்கள் பலரும் ஆதங்கப் பட்டனர். அதே ஆதங்கம் சிவகார்த்திகேயனின் அம்மாவிற்கும் இருந்ததாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தவறாமல் பார்க்கும் சிவகார்த்திகேயன் குடும்பம், தாமரைச்செல்வி கஷ்டப்படுகிற குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அந்தப் பணம் உபயோகமாக இருந்திருக்கும் என சிவகார்த்திகேயனின் அம்மா புலம்பினார் என அவரே ராஜு தொலைபேசியின் வாயிலாக தாமரை செல்வியை தொடர்புகொண்டு பேசினாராம்.

அப்போது தாமரை, ‘பணம் தான சார் அதை எப்ப வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் மக்கள் மனதில் இடம் பிடிப்பது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மட்டும்தான் கிடைக்கும்’ என்று உறுதியுடன் சிவகார்த்திகேயனுக்கு பதில் அளித்தாராம்.

இதை தாமரைச்செல்வி தற்போது கலந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சுருதி உடன் பகிர்ந்திருக்கிறார். எனவே இந்த செய்தி ஆனது தற்போது சமூக வலைதளங்களில் பிக் பாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.