பிக் பாஸ் பயில்வானுக்கு கிடைத்த புதுப்பட வாய்ப்பு.. விஜய் டிவியை மலைபோல் நம்பும் முதலாளி

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தார் நடிகர் நடிகைகள் எல்லாம் தற்போது திரைப்படங்களில் வலம் வர தொடங்கி உள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்தத் தகவலை பாலாஜி முருகதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு. ‘எதிர்பார்க்காததை எதிர்பார்’ என்று குறிப்பிட்டுள்ளார். பாலாஜி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிவானியுடன் அடித்த லூட்டி ரசிகர்களிடம் இன்றுவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அத்துடன் பாலாஜி முருகதாஸ்  பிக்பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்து இரண்டாவது இடத்தை பெற்றார். ஆகையால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளி வந்த நாளிலிருந்தே படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த பாலாஜி முருகதாஸ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான ரவீந்திரன் அவர்களின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

அதற்கான ஒப்பந்தத்திலும் பாலாஜி முருகதாஸ் கையெழுத்திட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன்3ல் கலந்து கொண்ட கவின் கதாநாயகனாக நடித்த லிப்ட் படத்தையும் ரவீந்திரன் அவர்களே தயாரித்து இருந்தார். அந்தப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோன்றுதான் குக் வித் கோமாளி பிரபலமான அஸ்வின் நடிக்கும் படத்தையும் ரவீந்திரன் தயாரித்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் இவர்களது வரிசையில் பிக்பாஸ் பயில்வான் பாலாஜி நடிக்கும் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, படத்தை குறித்த முழு விவரமும் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறு அறிமுக நாயகன்களை வைத்தே படங்களை உருவாக்கும் நோக்கத்தில் இருக்கும் தயாரிப்பாளர் ரவீந்திரனை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். எனவே பாலாஜிக்கு ஜோடியாக சிவானியை போட வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது விருப்பத்தை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

விக்ரமை விடாமல் துரத்தும் சனி.. கோப்ரா படத்திற்கு கெடு வைத்த ரெட் ஜெயிண்ட் மூவிஸ்

விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார். அதிலும் பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் விக்ரமுக்கு ஸ்கோப் குறைவுதான். இதனால் கோப்ரா படத்தை மலைபோல் நம்பி ...