பிக் பாஸ் அபிஷேக்கின் முன்னால் மனைவி வெளியிட்ட பரபரப்பான அறிக்கை.. பழசை கிளறுவது நல்லதல்ல.!

விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல் இந்த சீசனிலும் முதல் டாஸ்க்காக கதை சொல்லும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்களின் சோக கதைகளை கூறி மற்றவர்களை அழ வைத்தனர்.

இந்நிலையில் பிரபல யூடியூபரும் சினிமா விமர்சகருமான அபிஷேக் ராஜா அவரது அம்மா குறித்து மிகவும் உருக்கமாக பேசியிருந்தார். மேலும், “என் அம்மாவை நான் அதிகம் கஷ்டப்படுத்தி விட்டேன். என்னுடைய விவாகரத்து அவருக்கு பெரிய வலியை கொடுத்து விட்டது. நான் தற்போது அவருடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து அபிஷேக்கின் முன்னாள் மனைவி தீபா நடராஜன் அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “எல்லோருக்கும் வணக்கம். நாமே தேர்ந்தெடுத்த ஒரு விஷயம் நமக்கு மோசமான ஒன்றாக அமைந்து விட்டால் அதில் இருந்து வெளியேறுவது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சில பேர் அந்த விஷயங்களை பற்றி கிளறுவதால், பேசுவதால் அந்த நினைவுகள் நம்முடைய ஒருநாள் அல்லது வாரத்தையே வீணாக்கும். நான் மூன்று வருடத்திற்கு முன்பு என்னுடைய திருமணத்தில் இருந்து வெளியேற முடிவு எடுத்தது என்னுடைய சொந்த முடிவு. அதற்கான விளைவுகளையும் நான் தான் சந்திக்கிறேன். அது என்னுடைய சொந்த விருப்பம் தான்” என கூறியுள்ளார்.

மேலும், “அபிஷேக்குடன் திருமணமான புதிதில் ஒரு யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்திருந்தேன். தற்போது அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். எனவே அந்த வீடியோவை நீக்குமாறு குறிப்பிட்ட அந்த மீடியாவிடம் கூறி இருந்தேன். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை” எனவும் கூறியுள்ளார்.

வில்லியாக மிரட்டிய 5 நடிகைகள்.. அதிலும் ராஜமாதா நடிப்பு அசத்தல்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உள்ள நடிகைகள் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குவார்கள். ஆனால் சில நடிகைகள் துணிச்சலாக வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அதில் வெற்றி கண்டுள்ளார்கள். அவ்வாறு வில்லியாக மிரட்டிய ஐந்து ...
AllEscort