பிக் பாஸில் கலந்து கொள்வதை நாசூக்காக பதிலளித்த விஜய் டிவி பிரபலம்.. பதிலை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

இதுவரை ஒளிபரப்பான நான்கு சீசன்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ரசிகர்கள் அனைவரும் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 5வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது.

முன்னதாக நான்கு சீசன்களையும் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார் என்பது விஜய் டிவியில் வெளியான ப்ரோமோ வீடியோ மூலம் உறுதியாகி உள்ளது. ஆனால் இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பது இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான கனி, சிவாங்கி, அஸ்வின் மற்றும் டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து பிரியங்காவிடம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியபோது, ‘இந்த சீசனில் வேண்டாம். அடுத்த சீசனில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்’ என்று நாசூக்காக பதிலளித்துள்ளார்.

ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிரபலமடைந்த அர்ச்சனா கடந்த சீசனில் பங்கேற்று பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டார். இதனை மனதில் வைத்துக்கொண்டுதான் பிரியங்கா பிக்பாஸில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளதாக தெரிகிறது.

எதிர்ப்பை மீறி சூர்யா செய்யும் செயல்.. பாலாக்கு இருக்கிற குடும்ப பிரச்சனையில இது வேறயா?

சூர்யா சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரின் படங்கள் சமூகத்திற்கு ஏதாவது ஒரு கருத்துக்களை சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களாகவே அமைகிறது. அந்தவகையில் தற்போது சூர்யா ...