பிக் பாஸில் இவ்வளவு பஞ்சாயத்து நடந்திருகிறதா.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த விஜய் டிவி

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய பெயர் எடுத்தவுடன் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை பிக்பாஸ் தளத்தில் இருந்து புதிதாக அறிமுகம் செய்து இருந்தனர். அந்த பிக்பாஸில் நடக்கும் கேலிக்கூத்து தான் இன்றைய சமூகவலைதளவாசிகளுக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. அப்படி பிக்பாஸில் நடக்கும் கூத்து கேலிகளுக்கு மத்தியில் பல விஷயங்களை பிக்பாஸ் மறைத்தும் இருக்கிறது. பாவம் அதைப் பார்க்கும் அனைவருக்கும் அது தெரிவதில்லை. அவர்களும் எல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் மக்களுக்கு மத்தியில் பிக்பாஸ் தனது நிகழ்ச்சியில் இஷ்டத்திற்கு அளந்துவிட்டு சம்பாதித்து வருகின்றது. தற்போது சமூக வலைதளங்களில் மிக பெரிய டிரெண்ட் ஆன விஷயம், கமல் பிக்பாஸை விட்டு வெளியேறி விட்டார் என்பதுதான். அப்படி அவர் வெளியேறுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் இதுதான் என்று எவரும் தெளிவாக எடுத்துக் கூறவில்லை. சரி உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்று தேடி அலசி ஆராய்ந்தபோது தான் ஒரு முக்கிய தகவல் கசிந்தது.

ஷூட்டிங்கின்போது கமலுக்கு பிடிக்காத ஒரு செயலை செய்து இருக்கிறது விஜய் டிவி. கமல் எப்போதும் மிகப் பெரிய கோபக்காரர். அவருக்கு பிடிக்காத ஒரு செயலை செய்தால் உடனே அதற்காக கோபப்பட்டு விடுவார். அவரும் பொறுமை காத்து சரி என்னதான் நடக்கும் பார்க்கலாம் என்று பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் விஜய் டிவி எல்லை மீறிப் போகவே கமல் அங்கிருந்து கேராவனுக்கு போய்விட்டாராம்.

கேராவனுக்கு கோபித்துக்கொண்டு போன வரை கூட்டமாக சென்று எவ்வளவோ சமாதானம் செய்தும் கமல் கொஞ்சம் கூட அசரவில்லை. எனக்கு இதெல்லாம் சரி வராது நீங்கள், வேறு ஆளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி விடாப்பிடியாய் வரமாட்டேன் என்று கூறி விட்டாராம். இனி என்னடா செய்வது என்று விழிப்பிதுங்கி போன விஜய் டிவி இருக்கு வேறு வழி தெரியவில்லை.

இவரை வைத்து இவ்வளவு விளம்பரம் செய்த பிறகு இவர் வரவில்லை என்றால் யாருமே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டார்கள் என விஜய் டிவி திக்குமுக்காடிப் போய் இருக்கிறது. சரி மீண்டும் ரம்யா கிருஷ்ணனை அழைத்து பார்க்கலாம் என்று யோசனை கூறி இருக்கின்றனர். உடனே கமல் இல்லாத ரம்யா கிருஷ்ணன் வந்த அந்த நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கில் பெரிதாக எதுவும் செய்யவில்லை. வழக்கமாக வாங்கும் ரேட்டிங்கை விட கம்மியாக தான் இருந்தது. அதுவும் அவர்களை அழைப்பதில் அங்கு இருக்கும் பலருக்கும் உடன்பாடும் இல்லையாம்.

இதனால் மூளையை கசக்கி பக்கா ப்ளான் போட்ட விஜய் டிவி ஏன் நாம் சிம்புவை தொடர்பு கொண்டு கேட்க கூடாது என்று முடிவு செய்து சிம்புவிடம் போன் செய்து கேட்டிருக்கின்றனர். சிம்பு பிக்பாஸ் தொகுத்து வழங்க வரவேண்டும் என்பது அவரது ரசிகர்களின் மிகப்பெரிய விருப்பம்.

பிக்பாஸ் பார்ப்பவர்களும் சிம்பு வந்தால் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும் என்றுதான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி சிம்புவிடம் கேட்ட பிறகு சிம்பு ஒப்புக்கொண்ட பின் சிம்புவும் புரோமோஷக்கு எல்லாம் தொடர்ந்து போய் வருகிறாராம். இதனால் ஏப்ரல் 7ஆம் தேதி சனிக்கிழமை வரை இவர் தொகுத்து வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது