பிக்பாஸ்5 வீட்டில் கேமராவிற்கு முத்தம் கொடுத்த முதல் போட்டியாளர்! அவரே வெளியிட்ட புகைப்படம்!

விஜய் டிவியில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி 11 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். இந்த சீசனில் யார் யார் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இதில் தற்போது வரை ஒரு சில போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை அவர்களே உறுதிசெய்துள்ளனர். அந்த வகையில் நடிகை ஷகிலாவின் மகள் மிலா, மிஸ்டர் இந்தியா கோபிநாத், செய்தி வாசிப்பாளர் கண்மணி மற்றும் நடிகர் ஷாலு ஆகியோர் உறுதியாக கலந்துகொள்கின்றனர் என்பதை அறிவோம்.

அத்துடன் குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷகிலாவின் மகள் மிலா தற்போது பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரே பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை ஆவார்.

மேலும் நமிதா மாரிமுத்து என்கிற மற்றொரு திருநங்கையும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷகிலாவின் மகள் மிலா, பிக் பாஸ் வீட்டில் இருக்கக் கூடிய கேமரா ஒன்றிற்கு முத்தம் கொடுத்துக் கொண்டு இருப்பது போல் புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. இவரின் புகைப்படமானது தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் வரவிருக்கும் இந்த சீசனில் பங்கேற்கக் கூடிய போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களும் போட்டு உள்ளனரா என்பதை உறுதி செய்யப்பட்டும், ஹோட்டல் ஓட்டலில் தனிமைப் படுத்தப்பட்ட பிறகே இவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.