விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் தற்போது ஐந்தாவது சீசனை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்த சீசன் நிறைவடையும் உள்ளதால், பிக் பாஸ் OTT நிகழ்ச்சி குறித்த தகவல்கள் இணையத்தில் கசிகிறது.

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களும் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேரடியாக ஓடிடி தளத்தில், அதாவது ஹாட்ஸ்டாரில் மட்டும் ஒளிபரப்பு செய்ய உள்ளனர். அத்துடன் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை யார் சுவாரசியமாக விளையாடினார்களோ அவர்களையே மீண்டும் பிக்பாஸ் OTTல் பங்குபெற உள்ளனர்.

எனவே இவர்களில் பிக் பாஸ் சீசன் OTTல் கலந்து கொள்ள உள்ள முதலில் போட்டியாளர் ஓவியா கலந்துகொள்ள உள்ளாராம். பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியில் பாதியில் வெளியேறிய ஓவியா மீண்டும் பிக் பாஸ் OTTல் கலந்துகொண்டு இவ்வளவு நாள் ரசிகர்கள் எதிர்பார்த்த ஆசையை நிறைவேற்ற உள்ளார்.

ஏனென்றால் இவர் ஏற்கனவே கலந்து கொண்ட பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொண்டபோது ஆரவ் உடன் ஏற்பட்ட காதல் மற்றும் ஜூலி உடன் ஏற்பட்ட வாக்குவாதம் போன்றவற்றின் மூலம்  ஓவியா பெரிதும் பிரபலமடைந்தார். அத்துடன் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய வார்த்தையும் தற்போது வரை ட்ரெண்டாகி உள்ளது.

அத்துடன் இதுவரை நடந்து முடிந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களை காட்டிலும் ஓவியாவிற்கு தான் பெரிய ஆர்மி உருவாகி உள்ளது. எனவே மீண்டும் பிக்பாஸ் OTTல் ஓவியா கலந்துகொண்டால் பிக்பாஸ் நிகழ்ச்சி வேற லெவலுக்கு ஹிட் கொடுக்கும்.

ஆகையால் 13 போட்டியாளர்களுடன் 42 நாட்கள் ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ள பிக் பாஸ் OTT நிகழ்ச்சியின் போட்டியாளர்களை குறித்த தகவல்கள் இனி வரும் நாட்களில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும். எனவே யார் யார் அடுத்த சீசனில் பங்கேற்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்