பிக்பாஸ்-5 நிகழ்ச்சி தொடருமா.? இடியாப்ப சிக்கலில் விஜய் டிவி, நமிதாவால் ஏற்பட்ட குழப்பம்.!

பிக்பாஸ்-5 நிகழ்ச்சியில் இருந்து நமிதா மாரிமுத்து சில நாட்களுக்கு முன் வெளியேறினார். இவர் வெளியேறியதற்கு மன அழுத்தம், உடல் நிலை போன்ற பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது.

பிக்பாஸ் வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் நமிதாவிற்கு ரகசியமாக சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் நமிதா 5 நாட்கள் இருந்த காரணத்தினால் போட்டியாளர்களுக்கும் பாதிப்பு இருக்குமா என்ற சந்தேகம் உருவாகி வருகிறது. இதன் காரணமாக தொலைக்காட்சி நிறுவனம் பங்கேற்பாளர்கள் அனைவரையும் தனிமை படுத்த உள்ளதாக தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பே போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பிறகே நிகழ்ச்சி ஆரம்பமானது. ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்த ஐந்து நாட்களுக்குள்ளாகவே போட்டியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி திட்டமிட்டபடி தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்த எந்த ஒரு அறிக்கையும் தொலைக்காட்சி நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் ஜோ மைக்கேல் நமீதா மீண்டும் பிக்பாஸ் வீட்டினுள் வருவார் என்பது போன்றும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா செய்த செயல்.. ஆடி போன படக்குழுவினர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா சமீபகாலமாக ஒரு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், கதைக்கு முக்கியத்துவம் படங்களுக்கு தான் நடிப்பதற்கு அதிகம் ஆர்வம் ...
AllEscort