பிக்பாஸ் 5க்கு செல்லும் குக்வித் கோமாளி பிரபலங்கள்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விஜய் டிவி

அனுதினமும் சுவாரசியம் குறையாமலும் ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியாக விளங்கும் பிக்பாஸ் விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மக்களிடையே சிறந்த என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியாக மாறிவிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அடுத்த மாதம் துவங்க உள்ளது. எனவே இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவலும் சமூகவலைதளங்களில் ஆர்வத்துடன் பகிரப்பட்டு வருகிறது. எனவே இந்த சீசனில் சந்தோஷ் பிரதாப், பிரதைனி சர்வா, கோபிநாத் ரவி, பவானி ரெட்டி, சூசன்,

திருநங்கை மாடல் அழகி நமிதா மாரிமுத்து, இமான் அண்ணாச்சி ஆகியோர் பங்கேற்கப் போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் பிக்பாஸில் கலந்துகொள்ளும் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

அந்த வகையில் குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னர் கனி, ஷகிலாவின் மகள் திருநங்கை மிலா, சுனிதா, பாபா பாஸ்கர் ஆகியோர் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் கசிகிறது. எனவே இன்னும் சில தினங்களில் யார் யார் பிக்பாஸில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி தனது ட்விட்டரில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரியான போட்டியாளர்கள் அமையவில்லை என்பதால் விஜய் டிவி பிரபலங்களை வைத்து இந்த நிகழ்ச்சியை முடித்து விடலாம் என்று பக்கா பிளான் போட்டு உள்ளது விஜய் டிவி. இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

ஸ்லீவ்லெஸ் புடவையில் நச்சுனு வந்த ராஷ்மிகா.. இணையத்தை அலறவிட்ட புகைப்படம்

கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. என்னதான் இவர் கன்னட சினிமாவில் அறிமுகமானாலும் தெலுங்கு சினிமாவில் தான் இவருக்கு பேரும் புகழும் பெற்று கொடுத்தது. விஜய் தேவர்கொண்டா ...