பிக்பாஸ் ஸ்கிரிப்ட்டை பக்காவாக பண்ணும் பவானி.. தயவுசெஞ்சு எடிட்டரை மாத்துங்க பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் இந்த வாரம் கலகலப்பாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும் நகர்ந்து வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த ஐந்து நாட்கள் கடந்த நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில், வெளியே அவர்கள் கடந்து வந்த பாதையை பற்றி கூறுகிறார்கள். இன்று சின்னத்திரை நடிகையான பவானி ரெட்டி தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றி உருக்கமாக கூறுகிறார்.

என் கணவர் இறந்த பொழுது நான் அழவில்லை அப்பொழுது எனக்கு கோபம் தான் வந்தது. மேலும் நிறைய கஷ்டப்பட்டோம், எவ்வளவோ கனவு கண்டோம் ஆனால் என்னை பாதியிலேயே விட்டுவிட்டு போயிட்டாரு என்று தெரிவித்தார்.

இவரது பேச்சை கேட்ட போட்டியாளர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.மேலும் என்னை ஒரு சிறு குழந்தை போல பார்த்துக் கொண்ட அவர் என்னை தனியாக விட்டு சென்றுவிட்டார். தனியாக வாழ்வதே என்னுடைய தலையெழுத்து என்று கூறி அழுகிறார்.

பவானி ரெட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே தன் தன் கணவரின் இறப்பைப் பற்றி இசைவானியிடம் கூறினார். இதனைக் கேட்ட ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்தனர்.

பவானியின் மொழி பிரச்சனை மற்றும் ரசிகர்களின் ஆதரவை கண்ட பிக்பாஸ் இதையே ஸ்கிரிப்ட்டா ரெடி பண்ணி ப்ரோமோ காட்சிகளுக்கு மட்டும் பவானிய காட்றாங்க. அவங்களும் அந்த ஸ்க்ரிப்ட எல்லா இடத்துலயும் ஒப்பிச்சுட்டு எபிசோடுல காணாம போயிடுறாங்க.