பிக்பாஸ் வீட்டில் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட பிரபலம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன்5ல் கலந்து கொண்டுள்ள 17 போட்டியாளர்களில் ஒரு சிலர் மக்களுக்கு தெரிந்த முகங்களாகவும் மற்றவர்கள் புதுமுகமாகவும் இருப்பார்கள். அதனால் அவர்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மக்களோடு பகிர்ந்து கொள்ள ஒரு டாஸ்கை பிக் பாஸ் கொடுத்தார். அந்த வரிசையில் நதியா சாங், அவர்களது வாழ்க்கையில் நடந்த துயரமான சில சம்பவங்களை சக போட்டியாளர்களுடனும், மக்களுடனும் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது நதியா சாங் கூறியதாவது, என் அம்மா என்னை அடித்து துன்புறுத்தினார்கள். என்னை போலீஸிடம் அடி வாங்க வைத்தார்கள். நான் எனது 13 வயதில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன், எனக்கு முன்னால் இருந்த மூன்று அக்காக்களையும் மிகவும் கொடுமைப்படுத்தினார் என்றும், தனது சிறுவயதில் மிகவும் கஷ்டப் பட்டதாகவும், தன் தாயை எதிர்த்துப் பேசும் ஒரு ஆண்மகனை தான் திருமணம் புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால் தனக்கு பிடித்த சாங்-ன் கைகளை பிடித்தேன் என்றும், அதன்பின்னரே அவர் மாடலிங் இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்ததாகவும் கூறினார்.

அதனை தொடர்ந்து இவருக்கு மாடலிங்கில் மலேசிய இந்திய பெண் மாடலில் முதல் ஆளாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதையும் இவருக்கு தனது கணவர் சாங் வந்த பிறகுதான் சுதந்திரமும், சந்தோஷமும், அன்பும், அரவணைப்பும் கிடைத்ததாகவும் கூறிய நதியா சாங், அவரது கணவர் சாங் சொன்ன ஒரே காரணத்தினால் தான் இவர் இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட சக போட்டியாளர்களும் மனம் நெகிழ்ந்து, நாடியாவின் கணவரான சாங்கை மிகவும் பாராட்டினர். இது மட்டுமின்றி, இதைக் கேட்ட பிரியங்கா அனைத்து பெண்களுக்கும் சாங் போன்று கணவர் அமைந்தால் எல்லா பெண்களாலும் உயரத்திற்கு செல்ல முடியும் என புலம்பினார். இந்நிலையில் நாடியா சொன்ன கதை பொய்யானது என ஒரு மலேசிய தமிழர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர், ‘எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு? நீ சொல்ற எல்லாத்தையும் கண்ண மூடிட்டு நம்புவோம் நினைச்சியா? உன் கதைய உன்ன பத்தி தெரியாதவங்க கிட்ட போய் சொல்லு. எங்க கிட்ட சொல்லாத எனவும் மலேசியாவைப் பொறுத்தவரை 18 வயதுக்குக் கீழ் இருக்கும் சிறுவர்களுக்கு எந்த வேலையும் தர மாட்டார்கள். அப்படி இருக்கும்போது 15 வயதில் நீ எப்படி வேலை செய்தாய் அதையும் தாண்டி மலேசியா போலீஸ் உன்னை அடித்தார்களா?

அதையும் உன் தாய் வேடிக்கை பார்த்ததாக வாய்கூசாமல் கூறி இருக்கிறாயே எனவும் வரிசையாக பல கேள்விகளை நாடியா மீது தொடுத்தார் அந்த மலேசிய நபர். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வா உன் கையில் காப்பு போட மலேசிய போலீஸ் காத்திருக்கிறது என்றும் இறுதியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.