பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக வெளியேறும் பிரபல மாடல் அழகி.. டாடா சொல்லி வழியனுப்பும் கமல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று கமலஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். அப்போது கடந்த வாரம் முழுவதும் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை போட்டியாளர்களுடன் உரையாடுவதை உலகநாயகன் கமலஹாசன் வழக்கமாக வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறுபவரையும் கமலஹாசன் அறிவிப்பார். அந்த வகையில் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 15 போட்டியாளர்களும் மிகுந்த பதட்டத்துடன் ஒவ்வொரு நாளையும் கடக்கின்றனர்.

தற்போது கிடைத்த செய்தியின் படி, பிரபல மலேசிய மாடல் அழகியான நாடியா சாங் என்பவர்தான் இந்த வாரம் எலிமினேட் ஆகப் போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் நாடியா சாங், இருக்கும் இடம் தெரியாமலே மறைந்துவிட்டார். அத்துடன் சுவாரசியம் குறைந்து போட்டியாளரும் அவராகத்தான் உள்ளார். மேலும் கமலே சென்றவாரம் நாடியா சாங்கை பார்த்து, ‘உங்களது குரல் வீட்டில் ஒலிக்க வேண்டும். அதை ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்’ என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இருப்பினும் நாடியா சாங், கடந்த வாரம் முழுவதும் தன்னுடைய நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இல்லாதது போன்றே தெரிந்தது. மேலும் இரண்டு வாரத்தில் நாடியா சாங் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த கன்டென்ட்டும் கொடுக்கவில்லை என்பதே ரசிகர்களின் பெரும் குற்றச்சாட்டாகும்.

ஆகையால் பிக்பாஸ் ரசிகர்கள் பிக்பாஸ் விட்டு வெளியே செல்லவிருக்கும் நாடியா சாங்கிற்கு டாடா காட்டி வழி அனுப்ப ஆர்வத்துடன் காத்துள்ளனர். இருப்பினும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முதல் நபர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஓடிடி தளத்தில் வெளியாகப்போகும் கேஜிஎப் 2.. பல கோடி கொடுத்து தட்டித் தூக்கிய நிறுவனம்

பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14 அன்று வெளியான திரைப்படம் கே ஜி எஃப் 2. முதல் பாகத்தை காட்டிலும் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ...