பிக்பாஸ் வீட்டில் சிவகார்த்திகேயனாக மாறி வரும் பிரபலம்.. கவனிக்க தவறிய போட்டியாளர்கள்

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ராஜு ஜெயமோகன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர்-2 தொடரில் நடித்து வரும் இவருக்கு ரசிகர் பட்டாளம் நிறைய உண்டு.

அறந்தாங்கி நிஷா உடன் இணைந்து “காமெடி ராஜா கலக்கல் ராணி” நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். ரசிகர்களால் “ராஜு பாய்” என்று அழைக்கப்படும் இவர் நடிகர் பாக்யராஜின் சிஷ்யன் ஆவார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாளில் பாக்யராஜ் அவர்கள் இவருக்கு வாழ்த்து கூறி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் ஆரம்பித்த நாள் முதல் இவர் போட்டியாளர்களிடம் மிகவும் கலகலப்பாக பழகி வருகிறார்.

தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொள்ளும் விதம், பேச்சு அனைத்தும் நடிகர் சிவகார்த்திகேயன் போல் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் நீங்கள் கவின் மற்றும் சிவகார்த்திகேயனின் நண்பர் என்று எங்களுக்கு தெரியும் அதற்காக அவர்களை அப்படியே பின்பற்றுவது நல்லா இல்லை என்றும் பிக்பாஸ் வீட்டில் நீங்கள் எப்போது நீங்களாகவே இருப்பீர்கள் என்றும் கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் ஒருவருக்கு கூடவா இவர் சிவகார்த்திகேயனை போல் நடந்து கொள்வது தெரியவில்லை என்ற கேள்வியையும் ரசிகர்கள் கேட்கின்றனர்.

நடிகர் ராஜு ஜெயமோகன், கவின் நடிப்பில் வெளிவந்த “நட்புனா என்னனு  தெரியுமா” என்ற திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்தார் என்பது கூடுதல் தகவல்.

தலைவா 2 எப்போது வரும்?.. ரசிகர்களின் கேள்விக்கு ஏஎல் விஜய்யின் பதில்

விஜய் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தலைவா. அமலாபால், சத்யராஜ், சந்தானம் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். ...