விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் சென்ற வாரம் முழுவதும் ஜாலியாகவும் ஒற்றுமையாகவும் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த வாரத்தின் துவக்க நாளான இன்று நாமினேஷன் பார்சஸ் நடைபெற்றது. இதில் தற்போது வீட்டிலிருந்து வெளியே போக நினைக்கும் இருவரை ஒவ்வொரு போட்டியாளரும் தேர்வு செய்ய வேண்டும்.

எனவே நாடியா, நிரூப், இமான். இசை வாணி, பிரியங்கா, அபினய், அபிஷேக், அக்ஷரா இந்தவார நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்களின் தேர்வு அக்ஷராவாக உள்ளது. ஏனென்றால் அவர் இந்த வீட்டில் சக போட்டியாளர்களுடன் சகஜமாக பழக வில்லை என்பது மற்றப் போட்டியாளர்களின் குற்றச்சாட்டாகும்.

அத்துடன் அக்ஷரா தாமாக முன்வந்து மற்ற போட்டியாளர்களுடன் பேச தயங்குகிறார் என்றும் சிலர் கூறுகின்றனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று கூட கமல் முன்பு போட்டியாளர்கள் தங்களுக்குப் பிடிக்காத நபரை தேர்வு செய்யுங்கள் என்று கூறியபோது, அக்ஷராவை தான் தேர்வு செய்து அவருக்கு டிஸ்லைக் கொடுத்தனர்.

அதன்பிறகு அக்ஷரா மற்ற போட்டியாளர்கள் எல்லாம் என்னை பிளான் பண்ணி செஞ்சுட்டாங்க என்று குற்றம் சாட்டினார். எனவே இந்த வார பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்படுபவர் அக்ஷராவாக தான் இருக்கும் என்று பிக்பாஸ் ரசிகர்கள் யூகிக்கின்றனர்.

அத்துடன் பிக்பாஸ் வீட்டில் யூடியூபர் அபிஷேக் ராஜா சைட் அடித்துக் கொண்டிருந்த அக்ஷரா வரும் வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினால் நிகழவிருக்கும் காதல் காட்சிக்கு பஞ்சம் ஏற்படுமே என்று ரசிகர்கள் ஒருபுறம் ஏங்குகின்றன.

மேலும் இதுவரை அமைதியாக இருந்த வீடு இன்று நடக்கப்போகும் நாமினேஷன் பார்சஸினால் கலவரமாக மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆகையால் இனி வரும் நாட்களில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.