பிக்பாஸ் வீட்டிற்கு போறீங்களா? மடக்கிப்பிடித்து கேட்ட செய்தியாளரிடம் உளறிக் கொட்டிய ஜிபி முத்து!

ஜிபி முத்து என்பவர் டிக் டாக் என்ற செயலின் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சயம் ஆனார். இவரின் இயல்பான நகைச்சுவையினாலும், இவரின் பேச்சு தோரனையாலும் இவருக்கென பல ரசிகர்கள் உருவாகினர். இவரின் டிக் டாக் வீடியோக்கள் பெரிதும் பிரபலமானது.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு டிக் டாக் என்ற செயலியை அரசு தடை செய்தது. அதற்குபிறகு ஜிபி முத்து யூடியூபில் தனக்கென ஒரு சேனல் தொடங்கி அந்த சேனலின் வாயிலாக தனது ரசிகர்களுக்கு தொடர்ந்து நகைச்சுவை விருந்து அளித்து வருகிறார். இவருக்கென ஒரு மில்லியன் ரசிகர்கள் தற்போது உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இவர் பிரபல நடிகை சன்னி லியோனுடன் ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் இவருக்கு பல திரைப்படங்கள் வரிசைகட்டி நின்று கொண்டிருக்கிறதாம்.

தற்போது என்னடா வாழ்க்கை என்ற திரைப்படத்தின் ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜிபி முத்துவிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தபோது, ‘பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக வரப் போகிறீர்களா?’ என்ற கேள்வியை முன்வைத்தனர்.

அதற்கு ஜிபி முத்து தனது பதிலை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர். தனது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிந்து நீண்ட நாட்கள் வேறு இடங்களில் தங்குவது தனக்கு சாத்தியமானது அல்ல என்றும், எனக்கு என் வீடே போதும் பிக்பாஸ் வீடு வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அத்துடன் நான் அங்கே சென்றால் என் வாய் சும்மா இருக்காது. பல சண்டைகள் போட நேரிடும். அதனால் இப்போதைக்கு பிக் பாஸ் வீட்டிற்கு செல்வது போன்ற எண்ணம் ஏதும் எனக்கில்லை என்று அவருடைய பாணியில் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

வாயில் சிகரெட், கையில் கட்டு என மிரட்டும் அரவிந்த்சாமி.. டைட்டிலுடன் போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. சாக்லேட் பாயாக வலம் வந்த இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர். இவ்வாறு உச்சத்தில் இருந்த அரவிந்த் சாமி ...