சூர்யா ஜோதிகா இணைந்து தயாரித்து 6தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’. இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் அதிரடியான, அரசியல் சார்ந்த கருத்துக்களை பதிவு செய்துள்ள திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தின் தலைப்பிற்கே பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற கதையை தயாரிக்க சூர்யாவும், ஜோதிகாவும் முன்வந்ததை அனைத்து இயக்குனர் சார்பில் பாராட்டியுள்ளனர்.

இந்த திரைப்படத்தில் அதிகாரத்தில் இருக்கும் ஆட்களுக்கு காவல்துறை காட்டும் விசுவாசத்தையும், அதேசமயம் விவசாயிகளை படுத்தும் பாட்டையும் வெளிப்படையாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர். கால்நடை அமைச்சரை ரம்யா பாண்டியன் கேள்வி கேட்டுள்ளார். அந்த காட்சியை பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதில் பல அரசியல்வாதிகளை நேரடியாக தாக்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட சர்ச்சைகளையும் மீறி இந்த படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனரின் முழு திறமையையும் படத்தில் காணலாம் என்று படத்தை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை பார்த்த, பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண், தனது வலைதள பக்கத்தில், ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போனதாக தெரிவித்துள்ளார்.  அத்துடன் இந்த திரைப்படத்தை இயக்கிய குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

இவரின் வாழ்த்துக்களுக்கு நடிகை ரம்யா பாண்டியன் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் நடிகை ரம்யா பாண்டியனுடன் இணைந்து நடிக்கும்படி நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.