பிக்பாஸ் பவானி ரெட்டி கணவர் தற்கொலைக்கு அவர்தான் காரணமா? ரசிகர்களிடம் பரிதாப ஓட்டு வாங்க திட்டம்

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் சிலர் மட்டுமே மக்கள் மத்தியில் பரீட்சயமானவகளாக உள்ளனர். அதில் இமான் அண்ணாச்சி, ஆங்கர் பிரியங்கா, நடிகர் ராஜு உள்ளிட்ட சிலர் மட்டுமே ரசிகர்களுக்குத் தெரிந்த போட்டியாளர்களாக உள்ளனர்.

அந்த வரிசையில் சின்னத்திரை நடிகை பவானி ரெட்டியும் ஒருவராவார். நடிகை பவானி ரெட்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தவணை முறை வாழ்க்கை, ரெட்டைவால் குருவி, அதனை தொடர்ந்து பிரபல சின்னத்திரை நடிகர் பிரஜினுக்கு ஜோடியாக நடிகை பவானி ரெட்டி நடித்திருந்த சின்னத்தம்பி நாடகம் மக்கள் மத்தியில் இவரை பிரபலம் அடைய செய்தது.

நடிகை பவானி ரெட்டி தன்னுடன் இணைந்து நடித்த நடிகரான பிரதீப் என்பவர் மீது காதல் வயப்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டுள்ளார். ஆனால் திருமணம் ஆகி 8 மாதங்களே ஆன நிலையில், நடிகை பவானி ரெட்டியால் ஏற்பட்ட அவமானத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் நடிகர் பிரதீப் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதனால் நடிகை பவானியை பலரும் கடிந்து கொண்டனர்.

ஏனென்றால் பிரதீப் இறப்புக்கு பவானி ரெட்டியின் செயலே காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் நடிகை பவானி ரெட்டி திருமணம் ஆகி சில நாட்களிலேயே வேறு ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போலவும், அந்த நபர் உடனேயே அடிக்கடி தனது நேரத்தை செலவிட்டு வருவதையும் அனைவரும் அறியும்படி தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார்.

இவருடன் நெருக்கம் காட்டி வந்த அந்த நபரும் அடிக்கடி நடிகை பவானியை வெளியில் அழைத்துச் செல்வது, தேவையான பொருட்களை வாங்கி தருவது, அவ்வப்போது பரிசு கொடுத்து மகிழ்விப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் மனதளவில் காயப்பட்ட நடிகர் பிரதீப் மனைவியை கண்டித்த போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சண்டை பெரிதாகி உள்ளது.

மனைவியின் போக்கு பிடிக்காத காரணத்தினால் அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாத நடிகர் பிரதீப் தற்கொலை செய்திருக்கலாம் என்று பலரும் கூறினர். தற்போது நடிகை பவானி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இவரின் இந்த கதையை கூறி பரிதாப ஓட்டினை பெற முயற்சி செய்துள்ளார். இச்சூழ்நிலையிலும் கணவருக்கு தெரியாமல் தொடர்பில் இருந்த அந்த நபருடன் இன்றுவரை தொடர்ந்து தொடர்பில் இருக்கிறாராம்.

ரஜினிகாந்த் என்னும் பந்தயக் குதிரை.. கேள்விக்குறியான மொத்த சினிமா வாழ்க்கை

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது சினிமா பேட்டை வலைத்தளத்தில் தொடர்ந்து பல சிறப்புக் கட்டுரைகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் சில நடிகர்களைப் பற்றிய சுவாரசியமான கட்டுரைகளை ...