பிக்பாஸ் தொடங்கபடுவதால், ஊத்தி மூடிய விஜய் டிவியின் பிரபல சீரியல்!

முன்பெல்லாம் விஜய் டிவியை பொறுத்தவரை நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இப்போதெல்லாம் காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்புகிறது. இருப்பினும் எல்லா சீரியல்களுக்கும் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருந்த ஜாக்லின் திடீரென்று சீரியலின் கதாநாயகியாக தேன்மொழி பிஏ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்ட நாட்களிலிருந்தே அடிக்கடி நேரம் மாற்றப்பட்டு கொண்டிருந்தது.

ஏனென்றால் எப்படியாவது இந்த சீரியலை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா தோற்றால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட காலங்களில் நீண்ட நாள் ஒளிபரப்பாகாமல் இருந்தது. ஆனால் தற்போது தேன்மொழி சீரியலை முடித்துவிடலாம் என்ற முடிவில் விஜய்டிவி உள்ளதாம்.

இந்த தகவலை சீரியலின் கதாநாயகியான ஜாக்லின் உறுதிப்படுத்தியுள்ளார். ஏனென்றால் ஜாக்குலினிடம் இதைப்பற்றி கேட்கும்போது, கடந்த பிக்பாஸ் சீசன்4 ஒளிபரப்பானபோது தற்காலிகமாக இரண்டு வாரம் தேன்மொழி சீரியல் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பிறகு இப்பொழுது பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் மாதம் ஒளிபரப்புச் செய்யப் போவதால் சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாறுகின்றது. மேலும் தேன்மொழி பிஏ சீரியல் நிறைவு பெறுகிறது.

அத்துடன், ‘போன வருஷம் கோடு போட்டாங்க. அது கூட பரவாயில்லை இந்த வருஷம் ரோடே போட்டு அனுப்பிட்டாங்க. அதனால் பிஏ வரைக்கும் படிச்சது போதும் என்று நானும் மனதை தேற்றி கொண்டேன்’ என்று ஜாக்லின் ஜாலியாக பதில் அளித்துள்ளார்.

கூலிங் கிளாஸ் போட்டு சைடு போஸில் புகைப்படம் வெளியிட்ட ஆண்ட்ரியா.. மாலத்தீவு வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ஆண்ட்ரியா. இதையடுத்து இவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்து ...