ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஆனது இன்று விஜய் டிவியில் 6 மணிக்கு துவங்கப்பட்ட 11 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கிறது என்ற புகைப்படமும் சமூக வலைதளத்தில் கசிந்து ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டியுள்ளது.

அதேபோல் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பெயரும் தொடர்ந்த சோசியல் மீடியாக்களில் உலாவி வருகிறது. இருப்பினும் யார் யார் உறுதியாக இந்த சீசனில் போட்டியாளர்களாக களமிறங்குகின்றனர் என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை விஜய்டிவி வெளியிடவில்லை.

இந்த நிலையில் 2014ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்ட டைட்டில் வென்ற நமிதா மாரிமுத்து, பிக் பாஸ் சீசன் 5வில் கலந்து கொள்ள உறுதி செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தெலுங்கில் திருநங்கைகள் கலந்துகொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தமிழ் பிக்பாஸில் முதல்முதலாக திருநங்கையான நமிதா மாரிமுத்து கலந்து கொள்ளவுள்ளார்.

இவர் ஒரு சில டிவி சீரியல்களிலும், நாடோடிகள் 2 என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இவர்  2015 மிஸ் கூவாகம், 2018 மிஸ் இந்தியா போன்றவை வென்றவர்.

மேலும் இவர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான திருநங்கை உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ளார். இத்தகைய பெருமைக்குரிய நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் நிறைய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது