பிக்பாஸ் சீசன் 5-ல் வனிதாவை மிஞ்சும் அளவிற்கு களமிறங்கும் பிரபல வில்லி.. இனி கண்டெண்ட்க்கு பஞ்சமிருக்காது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதன் விளைவாக இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து, 5வது சீசன் வரும் அக்டோபர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, அடுத்த வருடம் ஜனவரி மாதம் நிறைவடையவுள்ளது.

எனவே பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் கசிகிறது.

இந்த சீசனில் சந்தோஷ் பிரதாப், பிரதைனி சர்வா, கோபிநாத் ரவி, பவானி ரெட்டி ஆகியோர் பங்கேற்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.இவர்களுடன் நடிகை சூசன் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பங்கேற்க உள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மைனா, ராட்சசன், நண்பேண்டா, அர்ஜுனன் என் காதலி, ராரா, நர்த்தகி போன்ற படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை சூசன்.

இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் போன்ற சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.

தற்போது பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும் சூசன், கண்டிப்பாக இன்னொரு வனிதாவாக நிகழ்ச்சியை காரசாரமாக கொண்டு செல்வார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் நெட்டிசன்களுக்கு கண்டெண்ட் கொடுக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவராக நிச்சயம் சூசன் இருப்பார்.

ஜெய் பீம் பட திரை விமர்சனம்.. போலிசை மொத்தமாக வச்சி செய்த சூர்யா

சில படங்களை, பாடம் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி பட்ட படைப்பு தான்  ‘ஜெய் பீம்’ . கமெர்ஷியல் அம்சங்களை குறைத்து, யதாரத்தை மக்களுக்கு புரிய வைக்கும் முயற்சி. நம்மை சுற்றி என்ன ...