விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5ல் பாசம், நேசம், சந்தோஷம் என போட்டியாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வருவதால், இது பிக்பாஸ் வீடா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு வேற லெவல் வீடாக காட்சியளிக்கிறது. ரசிகர்கள் இந்த சீசனை மிகவும் விரும்பி பார்த்து வருகிறார்கள்.  அதன் சாட்சியாக ரசிகர்கள் உருவாக்கக்கூடிய மீம்ஸ்கள் அனைத்தும் டாப் 10 இடங்களை பிடித்து மிகவும் டிரண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுபோன்று பிக் பாஸ் சீசன் 5 குறித்து வெளியாகும் மீம்ஸ் எல்லாம் வேற லெவல். கமலஹாசன், அபிஷேக் ராஜாவிடம் மற்ற போட்டியாளர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது அபிஷேக் ராஜா அனைவரைப் பற்றியும் கூறினார். அந்த வரிசையில் பிரியங்காவை என் கசின், என்றும் அவரை பற்றிக் கூறும்போது, அவர் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் என்னுடைய அக்கா போல் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

அபிஷேக் அவரது அக்காவை பற்றி கூறும்பொழுது ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அதை பார்த்து கமல் கூறுவதை போல் மீம்ஸ் போட்டுள்ளனர். அதில் கமல், நானே பெரிய நடிகன். நீ ஏன் முன்னாடியே நடிக்கிறியா? என்று கேட்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

அதேபோல் பவானி ரெட்டியின் சோகக் கதையைக் கேட்டு கமல் கூறுவதுபோல், ‘ஆனா பவானி , என்னையவே அழ வச்சுட்டேல்ல’ என்று உருவாக்கியுள்ள மீமிஸ் படு வைரலாகியுள்ளது. மேலும் பிக்பாஸ் வீட்டில் குக்கிங் டீம், வாஷிங் டீம், பாத்ரூம்  கிளீனிங் டீம், போன்று அவர்களுக்கு பிடித்தமான வேலையை எடுத்துக்கொண்டனர்.

அப்போது ராஜு முதலில் நான் பாத்ரூம் கிளீனிங் டீம் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறும் போது பிரியங்கா ‘நாங்க எல்லாம் ஒன்னாநோம் கக்கூஸ் கழுவி ஃபிரண்ட் ஆனோம்’ என்று கும்பலாக முழக்கமிட்டனர். அதை தற்போது மீம்ஸ்  செய்து அத்துடன் வடிவேலின் புகைப்படம் போட்டு, அதற்கு நிஷா என்ற பெயர் சூட்டி அதற்கு கீழே, ‘நானும் இப்படித்தான் ஸ்டார்டிங்ல மொக்கையா காமெடி பண்ணிட்டு இருந்தேன், அப்புறம் என்ன மொக்கையாக்கி வெளிய அனுப்பிட்டாங்க’ என்ற  மீம்ஸ் வலைதளத்தில் பார்வையாளர்களால் பகிரப்பட்டு வருகிறது.

அதேபோல் ராஜு மற்றும் பிரியங்காவின் புகைப்படம் போட்டு இவர்கள்தான் பிக் பாஸ் வீட்டில் ஸ்டிரஸ் பஸ்டர் என்று சிரித்த ஏமோஜி போட்டு மீம்ஸ் ஒன்றை கிரியேட் செய்து சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி உள்ளனர்.

இது மட்டுமின்றி இதுபோன்ற பல பிக்பாஸ் கன்டஸ்டன்ட் பேசும் வார்த்தைகளை எளிமையாக போட்டு மீம்ஸ் கிரியேட் பண்ணி வலைத் தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இது மக்களிடையே பயங்கரமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.