பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் பிரபல யூடியூபர்.. பட்டையை கிளப்பப் போகும் போட்டியாளர்!

அனுதினமும் சுவாரசியம் குறையாமலும் ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியாக விளங்கும் பிக்பாஸ் விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மக்களிடையே சிறந்த என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியாக மாறிவிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அடுத்த மாதம் துவங்க உள்ளது.

எனவே தொடர்ந்து ப்ரோமோகளை வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. மேலும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் 3ஆம் தேதி துவங்கவுள்ளது. அதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் போட்டியாளர்களை பற்றி அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்

அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவலும் சமூகவலைதளங்களில் ஆர்வத்துடன் பகிரப்பட்டு வருகிறது. எனவே இந்த சீசனில் சந்தோஷ் பிரதாப், பிரதைனி சர்வா, கோபிநாத் ரவி, ஷகிலாவின் மகள் திருநங்கை மிலா, பவானி ரெட்டி, சூசன், திருநங்கை மாடல் அழகி நமிதா மாரிமுத்து, இமான் அண்ணாச்சி,பிரியங்கா, சுனிதா ஆகியோர் பங்கேற்கப் போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது பிரபல தொகுப்பாளர் யூடியூப்பாருமான விஜி அபிஷேக் ராஜா பிக்பாஸ் சீசன்5ல் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் சினிமா பிரபலங்களுடன் எடுக்கும் பேட்டியானது மிகவும் பிரபலமானது.

அத்துடன் இவருக்கென்றே இருக்கும் யூடியூப் சேனலில் இவர் பதிவிடும் வீடியோக்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. எனவே சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் விஜே அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டிற்கு மட்டும் சென்றால் இவருக்கென்று தனி ஆர்மி உருவாகுவது உறுதி.

அந்த அளவிற்கு ரசிகர் கூட்டத்தை தன்வசப்படுத்தி உள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலை கேட்டதும் பிக்பாஸ் ரசிகர்கள் இந்த சீசனில் நல்ல என்டர்டைன்மென்ட் ஆக இருக்கும் என்று குஷியாகி உள்ளனர்.