வரும் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியை மக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்துள்ளனர். தற்போது வரை இந்த போட்டியில் கலந்து கொள்ள  இருந்த 20 போட்டியாளர்கள் பெயரில் இருந்து 16 போட்டியாளர்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்னிலையில் சீசன்5 -இல் முதல்நாள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்களை கமலஹாசன் அறிமுகம் செய்வார். அவர்களைப் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.

சந்தோஷ் பிரதாப்: இவர் தமிழ் சினிமாவில் 12 படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம்தான் இவர் பெரிதும் பிரபலம் அடைந்துள்ளார்.

பிரதைனி சர்வா: இவர் சென்னையில் பிறந்து தமிழ் பேசக்கூடிய ஒரு அழகிய மாடல். மேலும் படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தில் நடித்துள்ளார். சினிமாவில் அதிக பட வாய்ப்புகள் கிடைப்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். ஆகையால் இவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகு எவ்வளவு படவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கோபிநாத் ரவி: இவரும் தமிழ் பேசக்கூடிய மாடல். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் பஹீரா படத்திலும் நடித்துள்ளார்.

பவானி ரெட்டி: ரெட்டைவால் குருவி, சின்னதம்பி போன்ற சீரியல்களின் மூலம் பிரபலமான பவானி ரெட்டி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் ஒருசில கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக ‘இனி அவனே’ என்ற படத்தில் ஆபாச காட்சியில் நடித்த பவானி ரெட்டியின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

சூசன்: மைனா, ராட்சசன் போன்ற படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை சூசன்.

ஜாக்குலின்: இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி அதன்பின் தேன்மொழி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்துக் படித்துக்கொண்டிருந்த தற்போது பிக் பாஸ் திரைப்பட உள்ளதால் தேன்மொழி சீரியல் நிறுத்தப்பட்டது இதைத்தொடர்ந்து ஜாக்லின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளாராம்.

சுனிதா: விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அதன் பின்பு கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே பிரபலமானவர் சுனிதா. இவர் வட இந்தியாவிலிருந்து வந்திருந்ததால் இவருடைய கொஞ்சம் நிறைந்த தமிழ் பேச்சு பிக்பாஸ் வீட்டிலும் ஒலிக்கப் போகிறது.

பிரியங்கா: தற்போது விஜய் டிவியில் டிடி-க்கு அடுத்தபடியாக சட்டென்று நினைவுக்கு வரும் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அரங்கமே சிரிக்கும் அளவுக்கு நகைச்சுவை உணர்வோடு கொடுக்கும் திறமைசாலி அத்துடன் இவர் யூடியூப் சேனலில் எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.