பிக்பாஸ் கேப்ரில்லாவை இந்த கோலத்தில் பார்த்திருக்க வாய்ப்பில்லை.. அட அட என்ன ஒரு அழகு!

தனது ஒன்பது வயதிலேயே விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர்1 ஜூனியர் நடன நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்ற பெருமைக்குரியவர் தான் நடிகை கேப்ரில்லா. அதன்பிறகு இவர் சின்னத்திரையில் ஒரு சில நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் தனுஷின் 3 திரைப்படத்திலும், சமுத்திரகனியின் அப்பா திரைப்படத்திலும், சென்னையில் ஒரு நாள் என்ற படத்திலும் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இருப்பினும் இவர் கடந்த பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.

அதன் பிறகு இவருக்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. இதுவரை கேப்ரில்லாவிற்கு சோசியல் மீடியாக்களில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் உள்ளனர். அவர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடுவதை கேப்ரில்லா வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் இவர் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்வதன் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் தத்ரூபமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட கேப்ரில்லாவை பார்த்த பலரும் கமெண்ட் அடித்துள்ளனர்.

குறிப்பாக பேச்சாளரும் காமெடி நடிகையுமான அறந்தாங்கி நிஷா, இந்த புகைப்படத்திற்கு ‘அட அட என்ன ஒரு அழகு’ என வர்ணித்துள்ளார். இதற்கு கேப்ரில்லா, ‘உங்க அளவுக்கு இல்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

அதிலும் இன்னொரு புகைப்படத்தில் கேப்ரில்லா நடனமாடுவது போல் போஸ் கொடுத்து ரகளை செய்துள்ளார். பிக் பாஸ் சீசன்4 இல் கேப்ரில்லாவும் அறந்தாங்கி நிஷா ஒன்றாக கலந்து கொண்ட நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.