பிக்பாஸ் ஆட்டத்தை சரியாக ஆடும் ஒரே நபர்.. ஓவியாவை மிஞ்சும் ரசிகர் கூட்டம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது அனுதினமும் ரசிகர்களுக்கு பிடித்தமான சுவாரசியத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் லிஸ்டில் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் புதிதாக பஞ்சதந்திர டாஸ்க் நடைபெறுகிறது.

இதில் வைக்கப்பட்டிருக்கும் 5 நாணயங்களை, யார் திருடி பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களோ? அவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த டாஸ்க் துவங்கப்பட்ட நாளிலிருந்தே பிக்பாஸ் போட்டியாளர்களின் உண்மை முகம் வெளிப்பட்டுகிறது.

ஏனென்றால் பிரியங்கா, அபிஷேக், நிரூப் ஆகிய மூவரும் கூட்டு சேர்ந்துகொண்டு மற்ற போட்டியாளர்களை கார்னர் செய்து வருகின்றனர். அத்துடன் அக்ஷராவை ஓரம்கட்ட ராஜுவை வைத்து காய் நகர்த்திய பிரியங்காவிற்கு ஏமாற்றமே கிடைத்தது. ராஜு இந்தப் போட்டி துவங்கப்பட்ட நாளிலிருந்தே மற்ற போட்டியாளர்களை விட நியாயமாகவும் அமைதியுடனும் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

மேலும் எங்கு பேச வேண்டுமோ அவர்கள் தவறாமல் தன்னுடைய வாதத்தை எடுத்து வைப்பதும் அதேசமயம் ஒருத்தர் தன்னை ஏமாற்றுகிறார் என்று புரிந்ததும் அவர்களுடன் வாதிடாமல் அமைதியாகவே இருந்து, அவர்களுக்கு பதிலடி கொடுப்பதும் ராஜுவின் தனி ஸ்டைல் ஆக மாறிவிட்டது.

இதையெல்லாம் உன்னிப்பாக கவனிக்கும் பிக்பாஸ் ரசிகர்கள், ராஜு மட்டும்தான் பிக் பாஸ் விளையாட்டை சரியாகவும் நியாயமாகவும் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று சோசியல் மீடியாக்களில் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் ராஜுவுக்கென்றே சமூக வலைதளங்களில் ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஆகையால் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராஜு இந்த வாரம் வெளியேறினாலும் அவருக்கு ரசிகர்கள் மத்தியிலும், சினிமாவிலும் நல்ல பெயர் கிடைக்கும். ஏனென்றால் அந்த அளவிற்கு ராஜு தன்னுடைய நேர்மையான ஆட்டத்தை பிக்பாஸில் காட்டிக் கொண்டிருக்கிறார்.

தேவையா இந்த பொழப்பு.? வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது வரை தனக்கான இடத்தை பிடிப்பதற்காக சினிமாவில் போராடி வருகிறார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற விஷ்ணுவிஷால் அதன்பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் ...