பிக்பாஸ் அல்டிமேட் வெளியேறும் அடுத்த நபர்.. கூண்டோடு சிக்கிய போட்டியாளர்கள்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று அடுத்த வாரத்திற்கு யார் வெளியேறப் போகிறார்கள் என்பதற்கான நாமினேஷன் லிஸ்ட் ரெடியாகும்.

எனவே 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா, அபினை, சாரிக் உள்ளிட்ட 4 பேர் வெளியேறி தற்போது 10 பேர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் சுருதி, அபிராமி, ஜூலி, நிரூப், வனிதா, அனிதா, சினேகன், தாடி பாலாஜி ஆகிய 8 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்ட தாமரை மற்றும் அவருடன் பாலாஜி முருகதாஸ் இருவர் மட்டும் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருந்து எஸ்கேப் ஆகி உள்ளனர்.

ஆகையால் லிஸ்டில் இருக்கும் 8 பேரில் சினேகன் மற்றும் தாடி பாலாஜி இருவரும் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். ஏனென்றால் இந்த எட்டு பேரில் சினேகன் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளராக ரசிகனின் பார்வையில் தெரிவதால் அவர் குறைந்த ஓட்டுக்களைப் பெற்று இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது.

அத்துடன் தாடி பாலாஜி விளையாட்டின் முழு ஈடுபாடு செலுத்தாமல், ஏனோதானோ என எல்லா விளையாட்டையும் விளையாடுவதால் அவரும் வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது. ஆகையால் இவர்கள் இருவரும் யார் வெளியேற போகின்றார் என இந்த வார இறுதி நாளில் பொறுத்திருந்து பார்ப்போம்.