பிக்பாஸ் அல்டிமேட் – பாலாவுக்கு இப்படி ஒரு நிலைமையா.? ஓவர் நைட்டில் ட்ரெண்டான சம்பவம்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தற்போது நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் அனிதா சம்பத் இந்த நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் ஆகி சென்ற நிலையில் நேற்று வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு கோர்ட் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.

அதில் குற்றவாளியாக கூண்டில் ஏற்றப்படும் போட்டியாளர்களுக்கு ஆதரவாக சக போட்டியாளர் ஒருவர் வக்கீலாக ஆஜராக வேண்டும். அதன்படி அவர்களின் குற்றங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருதரப்பு பேச வேண்டும் என்று பிக்பாஸ் விதிமுறைகளை கூறினார்.

அதில் பாலா குற்றவாளியாக கூண்டில் நிற்கும் போது அவருக்கு ஆதரவாக ரம்யா பாண்டியன் மற்றும் எதிராக அபிராமி ஆகியோர் காரசாரமாக விவாதம் செய்தனர். அதன்பிறகு தாமரை வந்த பொழுது அவருக்கு ஆதரவாக பாலா வக்கீலாக வாதாட வந்தார்.

அப்போது தாமரை செய்த குற்றமாக அவர் நடிக்கிறார் போன்ற சில விஷயங்கள் முன்வைக்கப்பட்டது. அதனால் இந்த கேசை எடுத்து வாதாட முடியாது. தாமரை அக்கா நடிப்பது போல் தெரியவில்லை என்று கூறி வாதாடாமல் வெளியேறினார். இதைப் பார்த்த அபிராமி, சுருதி உள்ளிட்ட சிலர் பாலாவை நீ சேப் கேம் ஆடுற என்று கூறி சண்டையிட்டனர்.

ஆனால் அதற்கு பாலா தன்னுடைய வழக்கமான பாணியில் என்னுடைய கேமை தான் நான் ஆடுகிறேன் உங்களுக்கு தவறாக பட்டால் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை என்று கூலாக பேசினார். ஆனாலும் விடாத ஹவுஸ் மேட்ஸ் அவருடன் மல்லுக்கு நின்றனர். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்பது போல பாலா தில்லாக அவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

தற்போது இந்த நிகழ்வு சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட பாலா தன் மனதில் பட்டதை சரியோ, தப்போ அதை அப்படியே வெளிப்படுத்தினார். இதனால் ஆரிக்கும் அவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இருந்தாலும் பாலா ரசிகர்கள் ஆதரவுடன் இறுதி நிகழ்ச்சி வரை வந்தார்.

இப்போதும் பாலாவுக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. ஏனென்றால் தன் மனதில் உள்ளதை மறைக்காமல் வெளிப்படையாக காட்டும் அந்த குணம் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது. மேலும் வீட்டில் உள்ளவர்களால் ஜூலி கஷ்டப்பட்ட போது பாலா அவருக்கு நம்பிக்கை தரும் விதத்தில் பேசி அவரை சரி படுத்தினார். இந்த நிகழ்வுகள் தான் பாலாவை ரசிகர்கள் மனதில் தற்போது ஸ்ட்ராங்காக அமரவைத்துள்ளது. இதனால் அவர் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக வரவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.